குறைந்து வரும் நெசவுத் தறிகளால் வேலை இன்றி தவிக்கும் கரூர் நெசவாளர்கள்

கரூர்:  நிர்வாக சீர்கேடு காரண மாக கரூர் மாவட்டத்தில் தறிக ளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் நெசவாளர்கள் வேலை யின்றித் தவிப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற கரூர் மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வரை நெசவுத்தொழில் பலருக்கு வாழ்வா தாரமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டதாக நெசவாளர்கள் புலம்புகின்றனர்.
“முன்பெல்லாம் இப்பகுதி முழு வதும் உள்ள வீடுகளில் நெசவுத் தொழில் நடைபெறும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த வட்டாரத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவுத்தறிகள் இருந் தன. ஆனால் இப்போதோ அந்த எண்ணிக்கை வெறும் 6 ஆயிரம் தறிகளாகக் குறைந்து விட்டது.
“கரூர் மாவட்டத்தில் மட்டும் 56 கைத்தறி கூட்டுறவுச் சங்கங் கள் உள்ளன. ஒவ்வொரு சங்கத் துக்கும் 7 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தறிகள் இருக்க வேண்டும். ஆனால் மிகக் குறைந்த எண் ணிக்கையிலே தற்போது தறிகள் உள்ளன,” என்று நெசவாளர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம்

23 Aug 2019

சிவனுக்கு அப்துல் கலாம் விருது

கீரைக்கட்டுகளைப் போல் எலிகளை ஆறு  ஆறு எலிகளாகக் கட்டி ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.  படம்: ஊடகம்

23 Aug 2019

கும்பகோணத்தில் எலிக்கறி விற்பனை அமோகம்