You are here

உல‌க‌ம்

மருத்துவ பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர்ப்பின்போது மோசடி

தோக்கியோ: ஜப்பானில் தோக்கியோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகமான பெண்கள் சேர்வதைத் தடுக்கும் நோக்கத்தில், நுழைவுத் தேர்வு எழுதிய மாணவிகளின் தேர்வுத் தாள் மதிப்பெண்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வேண்டுமென்றே குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் இத்தகைய போக்கு பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் வெளியானதும் ஜப்பானிய மக்கள் மட்டுமல்ல; பெண் மருத்துவர்கள் மற்றும் அந்த பல்கலைக்கழக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளனர். அத்துடன் பலர் தங்கள் அதிருப்தியையும் சினத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிலாங்கூரில் இடைத்தேர்தல்; அம்னோ போட்டியிடாது

கோலாலம்பூர்: சிலாங்கூரில் ஸ்ரீ செத்யா தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அம்னோ கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் உதவித் தலைவர் முகமட் ஹசான் கூறியுள்ளார். அத்தொகுதியில் போட்டி யிடும் பாஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கும் வகையில் அத்தொகுதி இடைத்தேர்தலில் அம்னோ அல்லது தேசிய முன்னணி போட்டியிடாது என்று அவர் அறிவித்தார். பாஸ் கட்சிக்கும் அம்னோ கட்சிக்கும் இடையே புரிந்துணர்வு தொடங்கி யிருப்பதற்கான அறிகுறியாக இது கருதப்படுகிறது என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மாஸ்கோவில் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய ரஷ்ய உளவாளி பிடிபட்டார்

வா‌ஷிங்டன்: மாஸ்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணியாற்றிய ரஷ்ய உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண் கையும் களவுமாக பிடிபட்டதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் வட்டார பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு மாஸ்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வழக்கமான சோதனை மேற் கொண்டபோது ரஷ்யாவைச் சேர்ந்த அந்த பெண் உளவாளி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அந்தப் பெண், ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளுடன் பல தடவை சந்தித்துப் பேசியது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

சொல்வது ஒன்று செய்வது வேறு: வடகொரியாவை சாடும் அமெரிக்கா

சிங்கப்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டின் அணுவாயுதங்களைக் களைவ தாகக் கூறுவதும் மறுபக்கம் அந்நாடு அதன் அணுவாயுத திட்டங்களுக்கான பணிகளைத் தொடர்வதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித் திருக்கிறார். சிங்கப்பூரில் இன்று தொடங்கும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சிங்கப்பூருக்கு வந்துள்ள திரு போம்பியோ நேற்று இவ்வாறு கூறினார். வடகொரியா அணுகுண்டு தயாரிப்பதற்கான எரிபொருளை யும் புதிய ஏவுகணைகளையும் தயாரித்துவருவதாக திரு போம்பியோ கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

4 மில்லியன் பேருக்கு மலேசியா பண உதவி

கோலாலம்பூர்: மலேசிய அரசாங் கம் நான்கு மில்லியன் பேருக்கு இம்மாதம் 15ஆம் தேதி ரொக்கப் பணம் வழங்கவிருப்பதாக மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் வகையில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மலேசிய அரசாங்கம் பண உதவி வழங்கி வருகிறது. மக்களுக்கு நிதி உதவி வழங்கும் உதவித் திட்டத்தை 1மலேசியா திட்டம் என்று முந்தைய அரசாங்கம் அறிவித் திருந்தது. தற்போது அந்த உதவித் திட்டம் வாழ்க்கைச் செலவுக்கான உதவித் திட்டம் என்று புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்றாவது முறையாக மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படவுள்ளது.

மெக்சிகோ விமான விபத்து: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

மெக்சிகோவில் ஒரு விமானம் செவ்வாய்க்கிழமை விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து அந்த விமானத் தின் கறுப்புப்பெட்டி உட்பட தகவல், ஒலிப்பதிவு கருவிகளை புலன் விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த விமானத்தில் சென்ற 103 பயணிகளும் சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் 97 பேர் காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

காபூலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 3 வெளிநாட்டவர்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் மூன்று வெளிநாட்டினர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதி காரிகள் கூறியுள்ளனர். இதனை பயங்கரவாதச் சம்பவம் என்று போலிசார் வகைப் படுத்தியிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த மூவரில் ஒருவர் இந்தியர் என்று கூறப்படுகிறது. மற்ற இருவரில் ஒருவர் மலேசியர் என்றும் மூன்றாவது நபர் மெசிடோனியா நாட்டைச் சேர்ந்த வர் என்றும் அதிகாரிகள் கூறினர். காபூலில் கடத்தப்பட்ட அந்த மூவரும் அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் களின் சடலங்கள் ஒரு காருக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

சாபாவில் மரம் தொடர்பான நிறுவன அலுவலகங்கள் மீது சோதனை

கோத்தா கினாபாலு : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சாபா மாநிலத்திலுள்ள மரம் தொடர்பான நிறுவனங்களின் அலுவலகங்களின் மீது சோதனை நடத்தியுள்ளது. தேசிய முன்னணி தலைமையிலான முன்னைய அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள ஒப்பந்தங்களை விசாரிக்க அந்த ஆணையம் முனைகிறது. சன்டகான், தவாவ் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள மூன்று நிறுவனங்களின் மீது ஒரே நேரத்தில் ஆணையம் சோதனைகளை நடத்தியதாக ‘தி ஸ்டார்’ நாளிதழ் தெரிவித்தது.

அமெரிக்க வீரர்களின் உடற்பாகங்களை அனுப்பிய கிம்முக்கு டிரம்ப் நன்றி

சோல்: வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அத்துடன் கொரியப் போரில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் உடற்பாகங்களை அமெரிக்காவுக்கு வடகொரியா அனுப்பி வைத்ததற்கு திரு டிரம்ப் நன்றி தெரிவித்தார். 1950 முதல் 1953 வரை இரு கொரியாக்களுக்கு இடையே நடந்த போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் உடற்பாகங்கள் அவை என நம்பப்படுகிறது. திரு கிம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியதாக திரு டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் புகழ்ந்துள்ளார். அத்துடன், திரு கிம் கொடுத்த கடிதம் ஒன்றுக்காகவும் திரு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

ஸிம்பாப்வேயில் வன்முறை; ஐநா, பிரிட்டன் கவலை

ஹராரே: ஸிம்பாப்வேயில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி அதிக நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு தேர்தல் தொடர்பான வன்முறைகள் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்று முக்கிய எதிர்க்கட்சிகள் கூறி வரும் வேளையில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Pages