பெல்ஜியத்தில் இரு ரயில்கள் மோதல்

பிரசல்ஸ்: பெல்ஜியத்தில் சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 40 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பெல்ஜியத்தின் கிழக்குப் பகுதியில் ஒரே த-ண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த இரு ரயில்கள் மோதிக்கொண்டதாகவும் இந்த விபத்தில் இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

முன்னால் செ-ன்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது அடுத்து வந்த பயணிகள் ரயில் மோதியதாக அந்த அதிகாரி கூறினார். பயணிகள் ரயிலில் 50 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி, தடம் புரண்டது. விபத்தைத் தொடர்ந்து அவ் விடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.

பெல்ஜியத்தில் பயணிகளும் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்ததாகவும் 40 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடரும் வேளையில் தடம்புரண்ட ரயில் பெட்டியை அதிகாரி ஒருவர் சோதனையிடுகிறார். விபத்துக்கான காரணம் குறித்து புலன் விசாரணை நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். ஒரே தண்டவாளத்தில் சரக்கு ரயில் செல்லும்போது எப்படி பயணிகள் ரயில் செல்ல ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!