பினாங்கில் மேலும் ஒரு கோவில் சேதம்

மலேசியாவின் பினாங்கு மாநி லத்தில் மேலும் ஒரு இந்துக் கோவில் சிதைக்கப்பட்டுள்ளது. பினாந்தி வட்டாரத்தில் அமைந்து உள்ள ஸ்ரீதரும முனீஸ்வரர் ஆல யத்தின் சிலைகள் கடந்த வியாழக்கிழமை உடைக்கப்பட்டுள் ளன. இந்தக் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், முனீஸ்வரர் ஆகிய கடவுள்களின் சிலைகள் அவற்றின் பீடத்திலிருந்து அகற் றப்பட்டு உடைக்கப்பட்டுள்ளன. அதிகாலை நேரத்தில் கோவிலுக் குள் புகுந்து சிலைகள் சேதப்படுத் தப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக முத்துமாரியம்மன் கோவிலில் சிலைகள் உடைக் கப்பட்டன. இரண்டு கோவில் களிலும் சிலைகள் உடைக்கப்பட்ட விதம் ஒரே மாதிரியாக இருப் பதாக ஊடகங்கள் குறிப்பிடு கின்றன. மேலும், முத்துமாரியம்மன் கோவில் இப்போது சேதப்படுத் தப்பட்டுள்ள முனீஸ்வரர் ஆலயத் திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட் டர் தொலைவில்தான் உள்ளது. கடந்த வாரம் நிகழ்ந்ததைக் காட்டிலும் இந்தக் கோவிலில் சேதம் மோசமாக உள்ளதென பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி கூறியுள்ளார்.

அதிகாலை நேரத்தில் கோவிலுக்குள் புகுந்தவர்கள் விநாயகர், முருகன், முனீஸ்வரர் ஆகிய கடவுள் சிலைகளை பீடத்தில் இருந்து அகற்றி உடைத்ததாக நம்பப்படுகிறது. சிலைகளை சீரமைக்க மாநில அரசாங்கம் 10,000 ரிங்கிட் வழங்கியுள்ளது. படம்: த ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!