‘மகாதீர்- அன்வார் சந்திப்பால் கெஅடிலான் கட்சியிலிருந்து சிலர் வெளியேறக்கூடும்’

புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் சந்தித்துப் பேசியதால் கெஅடிலான் (பிகேஆர்) கட்சி உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறக் கூடும் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மது கூறியுள்ளார். திரு மகாதீர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்வாருக்குக் கெடுதல் செய்ததால்தான் பலர் அம்னோ விலிருந்து விலகி பிகேஆரில் சேர்ந்தார்கள் என்பதை அவர் மறந்து விட்டார் என செய்தி யாளர்களிடம் நூர் ஜஸ்லான் தெரிவித்தார். இப்போது அன்வாரை திரு மகாதீர் சந்தித்தது பிகேஆர் உறுப்பினர் கள் பலருக்குப் பிடிக்காது.

அது அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் நன்மை யாகத்தான் அமையும். ஏனென் றால் அதிருப்தி அடைந்த பிகேஆர் உறுப்பினர்கள் அக் கட்சியிலிருந்து வெளியேறக் கூடும் என்று நூர் ஜஸ்லான் கூறினார். திரு மகாதீர் திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அன்வாரை சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!