வடகொரியாவுக்கான தூதரைத் திருப்பியழைத்தது மலேசியா

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாமை பெண் உளவாளிகள் கொலை செய்த விவகாரத்தில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. வடகொரியத் தூதர் காங் சோல், தமது நாட்டின் குடிமகன் இறந்த விவகாரத்தில் கூட்டு விசாரணை நடத்த வடகொரி யாவை அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்தக் கோரிக்கையை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நிராகரித்தார்.

கிம் ஜோங் நாம் படுகொலை குறித்து அரசு மேற்கொண்டு உள்ள விசாரணைகளை அவர் தற்காத்துப் பேசினார். "மலேசிய காவல்துறையினரும் மருத்துவர்களும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் தங் களுடைய குறிக்கோளைச் சிறந்த வகையில் நிறைவேற்றுவார்கள்," என்றார் பிரதமர் நஜிப். நேற்று காலை வடகொரி யாவின் தூதரை அழைத்த மலே சிய வெளியுறவு அமைச்சு அவர் முன்னதாகத் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கேட்டது.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!