வியட்னாமை அடைந்திருக்கிறார் திரு கிம்

வடகொரியத் தலைவர் திரு கிம் ஜோங் உன் வியட்னாமுக்குச் சென்று சேர்ந்துள்ளார். வியட்னாமின் தலைநகர் ஹனோயில் அவருக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு பிப்ரவரி 27, 28 தேதிகளில் நிகழும்.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, வடகொரியாவுடனான உச்சநிலை சந்திப்புக்கான ஆயத்தப் பணிகளை நிறைவேற்ற வியட்னாமுக்குச் சென்றுள்ளார்.