பல்லாயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி

அமெ­ரிக்க அதி­ப­ராக வெற்றி பெற்­றுள்ள ஜன­நா­யக கட்சி வேட்­பா­ளர் ஜோ பைடன் தனது அமைச்­ச­ர­வை­யில் யாரை நிய­மிப்­பது என்­பது குறித்து ஆலோ­சித்து வரும் வேளை­யில், தற்­போ­தைய அதி­பர் டிரம்ப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் தேர்­தல் முடிவை எதிர்த்து நேற்று முன்­தி­னம் வாஷிங்­ட­னில் பெரும் பேர­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.

சென்ற 3ஆம் தேதி நடந்து முடிந்த தேர்­தல் முடி­வு­களை ஏற்க முடி­யாது என்­றும் அதில் பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­துள்­ள­தா­க­வும் தற்­போ­தைய அதி­பர் டிரம்ப் தொடர்ந்து குற்­றம்­சாட்டி வரு­கி­றார்.

இது­தொ­டர்­பாக மறு வாக்கு எண்­ணிக்கை கோரி­யும் பல்­வேறு மாநி­லங்­களில் டிரம்ப்­பின் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் சார்­பில் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அதி­பர் டிரம்ப்­பின் இக்­கூற்றை எதி­ரொ­லிக்­கும் வகை­யில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆத­ர­வா­ளர்­கள் நேற்று முன்­தி­னம் வாஷிங்­டன் வெள்ளை மாளிகை அருகே திரண்டு அவ­ருக்கு ஆத­ர­வாக கோஷ­மிட்டு போராட்­டம் நடத்­தி­னர்.

அதி­பர் தேர்­தல் முடி­வு­களை ஏற்க முடி­யாது என்­றும் அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு பதவி நீட்­டிப்பு வழங்க வேண்­டும் என்­றும் அவர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

அமெ­ரிக்க கொடி­களை உயர்த்­திப் பிடித்­தும் அதி­ப­ராக டிரம்ப் வர வேண்­டும் என்ற வாச­கங்­க­ளைத் தூக்­கிப்­பி­டித்­தும் அவர்­கள் ஆர்ப்­பாட்­டம் செய்­த­னர்.

அப்­போது கோல்ஃப் மைதா­னத்­திற்கு செல்­வ­தற்­காக கூட்­டத்­தி­ன­ரைக் கடந்து சென்ற டிரம்ப் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை பார்த்து கைய­சைத்­தார்.

பொது­வாக அமை­தி­யாக நடந்த இந்த ஆர்ப்­பாட்­டத்­தில், இரவு நேரத்­தின்­போது டிரம்ப்­பின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் எதிர்ப்­பா­ளர்­க­ளுக்­கும் இடையே சில இடங்­களில் மோதல் வெடித்­தது.

இந்த மோத­லில் இரு தரப்­பி­லும் பல­ருக்கு காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் ஒரு­வர் மீது கத்­திக் குத்து நடத்­தப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இது­தொ­டர்­பாக சுமார் 10 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக போலிசார் தெரிவித்தனர்.

‘மோசடி தேர்­தல்’ என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வரு­வது அதி­பர் நிர்­வா­கத்­தின் சுமூ­க­மான மாற்­றத்­திற்­குத் தடை­யாக இருக்­கும் நிலை­யில், மாநி­லங்­கள் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­குச் சான்­றி­தழ்­களை வழங்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, நேற்று காலை நில­வ­ரப்­படி பைடன் 306 இடங்­க­ளை­யும் டிரம்ப் 232 இடங்­க­ளை­யும் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜார்­ஜி­யா­வில் பைட­னும் டிரம்ப் வடக்கு கரோ­லி­னா­வி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!