ஒரே நாளில் 4,000 பேருக்கு மேல் மரணம்

பிரே­சி­லியா: பிரே­சி­லில் முதல் முறை­யாக 24 மணி நேரத்­தில் 4,000 பேர் வரை கிரு­மித்­ தொற்றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

ஆனால் கொவிட்-19க்கு எதி­ராக நாட்டை முடக்க அதி­பர் ஜயர் பொல்­ச­னாரோ தயக்­கம் காட்டி வரு­கி­றார். நாடு முழு­வ­தும் உரு­மா­றிய கிரு­மித்­தொற்று அதி­வே­கத்­தில் பரவி வரு­கிறது.

மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழி­வ­தால் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சிகிச்சை பெற முடி­யா­மல் மடிந்து வரு­கின்­ற­னர்.

இத­னால் தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை வழக்­கத்­திற்கு மாறாக அதி­க­ரித்து வரு­கிறது. இது­வரை தொற்­றுக்கு 337,000 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

உலக நாடு­களில் அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்­த­தாக பிரே­சி­லில்­தான் உயி­ரி­ழப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

“நாட்டை முடக்­கி­னால் பொரு­ளி­யல் பாதிக்­கப்­பட்டு நிலைமை மேலும் மோச­மா­கும்,” என்று அதி­பர் ஜயர் எச்­ச­ரித்­துள்­ளார்.

இதற்­கி­டையே உள்­ளூர் அதி­கா­ரி­கள் பிறப்­பித்த கட்­டுப்­பா­டு­களை நீதி­மன்­றத்­தின் மூலம் அகற்ற அவர் போராடி வரு­கி­றார்.

செவ்­வாய்க்கிழமை அன்று அதி­பர் மாளி­கை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அதி­பர் ஜயர், தனி­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை அவர் குறை­கூ­றி­னார்.

ஒரே நாளில் 4,000 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­னது குறித்து அவர் கருத்து தெரி­விக்­க­வில்லை.

இது­வரை 13 மில்­லி­யன் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன என்று அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் கொவிட்-19க்கு 66,570 பேர் இறந்து­ விட்­ட­னர். இது, முந்தைய மாதத்து டன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.