சிறாருக்கும் தடுப்பூசி போட பிலிப்பீன்ஸ் முடிவு

மணிலா: குறைந்­தது 12 வயது சிறு­வர்­க­ளுக்­கும் கொவிட்-19 தடுப்­பூசி போட பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. மிக வேக­மாகப் பர­வக்­கூ­டிய கொவிட்-19 டெல்டா கிருமி வகை­யு­டன் பிலிப்­பீன்ஸ் போராடி வரும் நிலை­யில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பிலிப்­பீன்ஸ் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே தடுப்­பூசித் திட்­டத்தை விரை­வு­ப­டுத்­த­வில்லை என்று கூறி பல அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்ள வேளை­யில், இந்த அறி­விப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. முதல் தடுப்­பூசி போடும் பணி­கள் தொடங்கி ஏழு மாதங்­கள் ஆன பிற­கும்­ பெ­ரி­ய­வர்­களில் 25 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்கொண்டு உள்ளனர். இதற்­கி­டையே, பிலிப்­பீன்­ஸில் அன்­றா­ட பாதிப்பு பெரும்­பா­லான நாட்­களில் 20,000க்கும் மேல் பதி­வா­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்து வரு­வ­தால் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ளது.

சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்­டால்­தான் பள்­ளி­களை மீண்­டும் திறக்க முடி­யும் என்று பிலிப்­பீன்ஸ் அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்ளனர்.

முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாக 120 தொடக்­கப்­பள்­ளி­கள், உயர்­நி­லைப்­பள்­ளி­கள் ஆகி­ய­வற்­றைத் திறக்க பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது. ஆனால் அது­தொ­டர்­பான விவ­ரங்­களை அது வெளி­யி­ட­வில்லை.

அடுத்த மாதத்­தி­லி­ருந்து சிறு­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்று பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!