‘டிரோன்’ ரக பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்

பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நான்கு உந்து கருவிகளைக் கொண்ட 'குவாட்காப்டர்' எனப் படும் டிரோன்களின் பெரிய அளவிலான 'இகாங்' ரக வாகனமே இத்தகைய டாக்சி களாகப் பயன்படுத்தப்பட உள்ளன. பொழுதுபோக்கு டிரோன்களைத் தயாரித்து வந்த சீன நிறுவனம் ஒன்று இந்த விதமான வாகனங் களைத் தயாரிக்கிறது. பறக்கும் டாக்சி சேவை இவ்வாண்டு கோடைக்காலம் முதல் தொடங்க இருப்பதாக அண்மையில் நடைபெற்ற அனைத்துலக அரசாங்க உச்ச நிலை மாநாட்டில் துபாய் சாலைப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. இந்த வகையான பறக்கும் டாக்சிகளில் ஒரு முறை மின்னேற்றப்பட்டால் 40 முதல் 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க லாம். 30 நிமிடப் பயணத்துக்குப் போதுமானதாக அந்த மின்னாற்றல் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த 'இகாங்' ரக டாக்சிகள் சுமார் 100 கிலோகிராம் எடை வரை சுமந்து செல்லக்கூடும். ஆனால் பயணிகள் அதில் அமைந்திருக்கும் சிறிய இருக் கைக்குள் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!