பணிப்பெண்ணைப் பட்டினி போட்டதால் சிறை, அபராதம்

தங்களது வீட்டுப் பணிப்பெண்ணை பட்டினி போட்ட தம்பதிக்கு நேற்று சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன. இந்தக் குற்றத்திற்காக லிம் சூன் ஹோங், 47, என்பவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப் பட்டன. அவருடைய மனைவி 47 வயது சொங் சூய் ஃபூனுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தம்பதிக்குக் அதிக பட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அர சாங்கத் தரப்பு வழக்கறிஞர், அதை விடக் குறைந்த தண்டனையே விதிக்கப்பட்டதால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறார். கணவன்-மனைவி இருவருக் கும் தலா $3,000 பிணை அனு மதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தம்பதி, 'கஸ்கடென் வாக்'கில் இருக்கும் 'பொலிவார்ட் ரெசிடன்ஸ்' என்ற புளோக்கில் இருந்த தங்களுடைய கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டில் வேலை செய்த தெல்மா ஒயாசன் கவிடான், 40, என்ற பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு ஒரு நாளுக்கு இரண்டு வேளை மட்டுமே உணவு கொடுத்ததாகக் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!