மித்தாலி ராஜ்: பெண்கள் கிரிக்கெட் வளர தனி ஐபிஎல்

லண்டன்: இங்கிலாந்தில் வரலாறு படைக்கும் தருணம் கைநழுவிப் போனாலும் இந்தியா மட்டுமல்லாது மற்ற பல நாடுகளையும் தங்கள் பக்கம் ஈர்த்தது இந்தியப் பெண்கள் கிரிக்கெட். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 9 ஓட்டங்களில் இங்கிலாந்திடம் தோற்றாலும் இந்தியப் பெண்கள் அணிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என் பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டை மேலும் தூக்கிவிட ஆண்களுக்கு இணையான பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைத் தொடங்குவற்கு இதுவே சிறந்த தருணம் என்று மித்தாலி ராஜ் நம்புகிறார்.

இங்கிலாந்து பெண்கள் அணியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு நேர கிரிக் கெட் வீராங்கனைகளாக உள்ள னர். இந்தியாவின் அனைத்து வீராங் கனைகளும் அப்படி அல்ல. எனினும் பெண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டியதற்காக பிசிசிஐ எனும் இந்திய கிரிக்கெட் வாரியம் அவ்வணியினர் ஒவ்வொருவருக் கும் தலா 50 லட்சம் ($ 105,628) பரிசுத் தொகையை அறிவித் துள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் தலைமுறையினருக்கு இந்த அணி அடித்தளத்தை அமைத்துள்ளது என்றும் இவர்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்குப் பல வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளனர் என்றும் மித்தாலி ராஜ் கூறினார். அடுத்த கிரிக்கெட் உலகக் கிண்ண அணியில் தாம் இடம்பெறமாட்டேன் என்று முன்னதாகக் கூறிய 34 வயது ராஜ், அதைக் கண்டு அவர்கள் பெருமைப்படவேண்டும் என்றார்.

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர் மித்தாலி ராஜ். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon