இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் வேலையைக் கைவிட்டார்

லண்டன்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அரண்மனை பணி களுக்குத் திரும்புவதற்காக நேற்று தமது அன்றாட ஆம்புலன்ஸ் வேலையைக் கைவிட்டார். தந்தை சார்ல்சுக்குப் பிறகு அரியணையை ஏற்பதில் இரண் டாவது இடத்தில் உள்ள 35 வயது இளவரசர், கடந்த ஜனவரி மாதம் தமது ஆம்புலன்ஸ் வேலையைக் கைவிடப் போவதாக அறிவித் திருந்தார். ‘ஈஸ்ட் ஆங்லியா’ என்ற ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் மீட்பு ஹெலிகாப்டரில் இளவரசர் வில் லியம் பகல் நேர விமானியாகப் பணியாற்றினார். இதற்கிடையே 90 வயதாகும் எலிசபெத் அரசியார் தமது அதி காரபூர்வ அரண்மனை வேலைகளைக் குறைத்துக்கொண்டதால் அப்பணிகளை ஏற்க வேண்டிய சூழ்நிலை இளவரசர் வில்லியத் துக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய இங்கிலாந் தில் கேம்பிரிட்ஜ் விமான நிலையத் தில் இரவு நேரப் பணியில் வில் லியம் ஈடுபடுவார் என்று அவரது அலுவலகம் குறிப்பிட்டது. கடந்த 2015ஆம் ஆண்டி லிருந்து இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் பணியில் ஈடுபட்டு வருகிறார். “ராணுவத்திற்குப் பிறகு இந்த வேலையின் அனுபவம் கிடைத் தது. இதனால் எஞ்சிய என் னுடைய வாழ்க்கை காலத்தில் இப் பணியைத் தொடர்வேன்,” என்று ஜனவரியில் வில்லியம் கூறி யிருந்தார். இளவரசர் வில்லியம், 2006 முதல் 2013 வரை பிரிட்டன் ஆயுதப் படையில் பணியாற்றி யவர்.

அவசர உதவி ஹெலிகாப்டரின் விமானி வேலையை இளவரசர் வில்லியம் கைவிட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon