2024 இறுதிக்குள் சிங்கப்பூர்- ஜோகூர் பாரு எம்ஆர்டி சேவை

சிங்கப்பூர்- ஜோகூர் பாரு இடையே 2024ஆம் ஆண்டிறுதிக்குள் எம்ஆர்டி சேவை தொடங்கப்படவுள்ளது. ஜோகூரின் புக்கிட் சாகார் நிலை யத்தையும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தையும் இணைக்கும் அந்த விரைவுப் போக்குவரத்து சேவையின் (ஆர்டிஎஸ்) மூலம் இரு வழிகளிலும் மணிக்கு 10,000 பேர் பயணம் செய்ய முடியும் எனத் தெரி விக்கப்பட்டது.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் தாம்சன்=ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி வழித்தடத்தில் உட்லண்ட்ஸ் நார்த் நிலையம் அமையவிருக்கிறது. இந்தப் புதிய ரயில் சேவையானது சிங்கப்பூர்=மலேசியா இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத் துவதோடு எல்லையைக் கடப்பதில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் உதவும். இஸ்கந்தர் மலேசியாவுக்கான சிங்கப்பூர்=மலேசியா கூட்டு அமைச் சர்நிலைக் குழுவின் 13வது கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு சிங்கப்பூர்=ஜோகூர் பாரு எம்ஆர்டி சேவை குறித்து கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

உள்கட்டமைப்புக்கான ஒருங்கி ணைப்பு அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான கோ பூன் வான், மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் அப்துல் ரகுமான் டாலான் ஆகியோர் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தனர். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், ஜோகூர் முதல்வர் காலிட் நோர்டின் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தப் புதிய எம்ஆர்டி சேவையை ஏற்று நடத்தும் வகையில் இரு நாட்டு அரசாங்கங்களும் ஓர் உள்ளூர் மெட்ரோ சேவை வழங்குநரை நிய மித்து, ஒரு கூட்டு நிறுவனத்தை அமைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண் டனர். ரயில்கள், ரயில் தடங்கள், சமிக்ஞை அமைப்பு உள்ளிட்ட அந்தப் புதிய எம்ஆர்டி சேவையின் செயல் பாட்டு அமைப்புகளையும் அந்தக் கூட்டு நிறுவனம் பராமரிக்கும்.

சிங்கப்பூர்-ஜோகூர் பாரு விரைவுப் போக்குவரத்து சேவை, சிங்கப்பூர்= கோலாலம்பூர் அதிவேக ரயில் சேவை ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக மலேசியா சென்றிருந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (வலமிருந்து 2வது), தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (இடது) ஆகியோருக்குச் சிறப்பான மதிய விருந்து அளிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!