கல்வியாளரின் நிரந்தரவாசம் ரத்து

லீ குவான் இயூ பொதுக் கொள்கைக் கழகத்தின் கல்வி யாளரான ஹுவாங் ஜிங்குக்கும் அவரது மனைவி ஷர்லி யாங் சியுபிங்குக்கும் சிங்கப்பூர் நிரந் தரத் தடை விதிப்பதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ‘வெளிநாடு ஒன்றுக்கு செல் வாக்கு செலுத்த உதவும் முக வராக’ டாக்டர் ஹுவாங் அடை யாளம் காணப்பட்டதாக அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. அந்த நாட்டின் முகவர் களோடும் உளவு அமைப்பு களோடும் அவர் பணியாற்றியதாக வும் அது குறிப்பிட்டது. ஆசியா மற்றும் உலகமய நிலையத்தின் இயக்குநராக டாக் டர் ஹுவாங் பணியாற்றினார். மேலும், லீ குவான் இயூ பொதுக் கொள்கைக் கழகத்தில் அமெரிக்க =சீன உறவுகளுக்கான லீ அற நிறுவனப் பேராசிரியர் என்பதும் அவரது பணியாக இருந்தது.

சீனா பற்றியும் வெளிநாட்டுக் கொள்கை விவகாரங்கள் குறித் தும் பல அமைப்புகளாலும் ஊட கங்களாலும் டாக்டர் ஹுவாங் கின் கருத்துகள் அவ்வப்போது கேட்கப்பட்டு வந்தன. வெளிநாடு ஒன்றின் செயல்திட்ட நிரலை கழகத்தின் மூத்த பணியாளர் என்ற முறையில் சிங்கப்பூருக்கு பாதிப்பை ஏற்படுத்த தெரிந்தே ரக சியமாக முன்னெடுத்துச் சென்ற தாகவும் அதனை அவர் வெளி நாட்டு முகவர்களின் ஒத்துழைப் போடு செய்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. “இச்செயல் சிங்கப்பூரின் உள் நாட்டு அரசியலில் வெளிநாட்டின் தலையீட்டுக்கு இட்டுச் சென்றது. எனவே ஹுவாங்கும் அவரது மனைவியும் சிங்கப்பூரில் தொடர்ந்து இருப்பதை சிங்கப்பூர் விரும்பவில்லை,” என்றது அமைச்சு. அதனால் குடிநுழைவுக் கட்டுப்பாட்டு அதிகாரி அவ்விரு வரின் வருகை மற்றும் மறுவருகை அனுமதியை ரத்து செய்துவிட்ட தாகவும் அது குறிப்பிட்டது.

 

டாக்டர் ஹுவாங் ஜிங். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்பு படம்