இலங்கை சிறையில் உணவு கிடைக்காமல் தவித்த மீனவர்கள்

காரைக்கால்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த மீனவர்களில் முதற்கட்டமாக 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்ததையடுத்து, அவர்கள் காரைக்கால் துறைமுகத்தை வந்தடைந்தனர். காரைக்கால் திரும்பிய மீனவர்கள், “நாங்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது இலங்கைக் கடற்படையினர் நாங்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி எங்களைக் கைது செய்தனர். “நாங்கள் இலங்கை சிறையில் இருந்தபோது உணவு கிடைக்காமல் தவித்தோம். எங்களுக்குச் சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை,” என்று கண்ணீர் மல்கக் கூறினர்.

Loading...
Load next