எஸ்.வி.சேகர் மேடையில் ஒலிபெருக்கி வெடித்தது

சென்னை: பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தபோது ஒலிபெருக்கிப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியதால் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் கடும் அதிர்ச்சி அடைந்தார். சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி யில் எஸ்.வி. சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாண வியருக்குப் பரிசுகளை வழங்கிய பின்னர் அவர் உரையாற்றினார். பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் சுவாரசியமாக விவரித்துக் கொண்டிருந்தபோது மேடைக்கு அருகே இருந்த ஒலிபெருக்கிப் பெட்டி ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

மேடையில் இருந்தவர்களும் அவசரமாகக் கீழே இறங்கினர். ஆனால் கடும் அதிர்ச்சி அடைந்த எஸ்.வி. சேகர் மேடையிலேயே உறைந்து நிற்க, பள்ளி ஊயழியர் கள் சிலர் ஓடிச்சென்று மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒலிபெருக்கிப் பெட்டி ஏன் வெடித்தது என்பது தெரியவில்லை.