சட்டவிரோத மீன்பிடிப்பு: பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரணை

மெர்லையன் பூங்காவில் இரு இளையர்கள் மீன்பிடிப்பதைக் காட்டும் காணொளி பரவியதைத் தொடரந்து பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரணை நடத்தி வருகிறது. Sure Boh Singapore என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான அந்தக் காணொளி சட்டவிரோ தமாக இருவர் மீன் பிடித்தலில் ஈடுபடுவதைக் காட்டியது. அந்த இருவரைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. “இச்சம்பவம் தொடர்பில் நாங்கள் விசாரணை நடத்தி வரு கிறோம். இந்த இருவரைப் பற்றிய விவரம் தெரிந்தால் ‘பிரைவெட் மெஸேஜ்’ பகுதியில் தெரி விக்கலாம்,” என ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் அறிக்கை வாயிலாக கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிவப்பு நிற டி-சட்டை அணிந்த இளையர் ஒருவர் பூங்காவின் நீர் சூழ்ந்த பகுதியின் படிக்கட்டுகளில் நிற்பதையும் மஞ்சள் நிறத்திலான பெரிய மீன் ஒன்றை நீரிலிருந்து அவர் வெளியே இழுப்பதையும் காணொளி காட்டியது. பழுப்பு நிற டி=சட்டை அணிந்த மற்றோர் இளையர் தூண்டிலைக் கையில் பிடித்தவாறு சக இளை யரைப் பார்த்து சிரிப்பதும் அப்ப டத்தில் வெளியாகி உள்ளது. வியாழக்கிழமை இரவு பதி வேற்றப்பட்ட இந்தக் காணொளி நேற்று முற்பகல் 11.15 மணி வரையில் 196,000 முறை பார்க்கப் பட்டதுடன் 3,100 முறை பகிரப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட பகுதி களில் மட்டுமே மீன்பிடிக்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் பொதுமக்களுக்கு நினைவூட்டி உள்ளது.

சிவப்பு நிற டி=சட்டை அணிந்த இளையர் ஒருவர் பூங்காவின் நீர் சூழ்ந்த பகுதியின் படிக்கட்டுகளில் நின்று மஞ்சள் நிறத்திலான பெரிய மீன் ஒன்றை நீரிலிருந்து வெளியே இழுப்பதைக் காணொளிப் படம் காட்டியது. படம்: ஃபேஸ்புக்/Sure Boh Singapore

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்