ஆய்வு: 55% சிங்கப்பூரர்கள் 337ஏ பிரிவை ஆதரிக்கின்றனர்

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 337ஏ பிரிவை 55 விழுக்காடு சிங்கப்பூரர்கள் ஆதரிப்பதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சுயேட்சை சந்தை ஆய்வு நிறுவனமான ‘இப்சோன் பப்ளிக் அஃபேர்ஸ்’ இணையம் வழியாக அந்த ஆய்வை நடத்தியது. 15 வயதுக்கும் 65 வயதுக்கும் இடையிலான 750 சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆடவர்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாக்கும் 377பிரிவை, பெண்களைவிட ஆண்கள் அதிக அளவில் ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.