ஹாக்கி: வெற்றிப் பயணத்தைத் தொடரும் அர்ஜெண்டினா

புவனேசுவரம்: 16 அணிகள் பங்கேற்கும் 14வது உலகக் கிண்ண -ஹாக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. நா ன் கு பி ரி வு க ளா க ப் பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டத்தில் ஒலிம்பிக் வெற்றியாளரும் உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜெண்டினா 3=0 எனும் கோல் கணக்கில் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள நியூசிலாந்தைப் பந்தாடியது. இதன் மூலம் இப்போட்டியில் அதன் இரண்டாவது வெற்றியை அர்ஜெண்டினா பதிவு செய்துள்ளது. இதனால் அர்ஜெண்டினா அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு வலுவடைந்துள்ளது.

அர்ஜெண்டினா அதன் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 4=3 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. நியூசிலாந்து அணி அதன் முதல் ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தியது. மற்றோர் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. இரு குழுக்களும் அவற்றின் முதல் ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்திருந்ததால் இந்த ஆட்டத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் திமத்தி கிளமென்ட் கோல் போட்டார். ஸ் பெ யி ன் அணியினர் ஆட்டத்தைச் சமன் செய்ய கடுமையாகப் போராடினர்.

பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் அபாரமாக விளையாடி பெனால்டி கார்னர் உள்பட ஸ்பெயினுக்குக் கிடைத்த பல கோல் வாய்ப்புகளை முறியடித்தனர். ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. இதையடுத்து, வெற்றி கோலைத் தேடி இரு அணியினரும் அதிரடியாக விளையாடினர். 51வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்புக் கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார். இறுதியில் ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. வரும் சனிக்கிழமையன்று போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா மீண்டும் களமிறங்குகிறது. போட்டியில் ஒரு வெற்றியையும் ஒரு சமநிலையையும் பதிவு செய்துள்ள இந்தியா அடுத்து கனடாவை எதிர்கொள்கிறது.

பந்தை வலை நோக்கி அனுப்பும் அர்ஜெண்டினா வீரர் லூக்கஸ் விலா (நடுவில்). படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!