கார்டியோலா: அசட்டையாக இருந்துவிட முடியாது

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அசட்டையாக இருந்துவிட முடி யாது என்று மான்செஸ்டர் சிட்டி யின் நிர்வாகியான பெப் கார்டியோலா கூறியுள்ளார். அவரது குழு நேற்று வாட்ஃபர்ட் குழுவுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் முதலில் இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை பெற்ற சிட்டி பின்னர் ஆட்டத்தின் 85ஆம் நிமிடத்தில் வாட்ஃபர்ட் குழுவை ஒரு கோல் போடவிட்டதன் பலனாக கடைசி சில நிமிடங்களைப் பதற்றத்துடன் விளையாடியது.

இறுதியில் சிட்டி குழு என்னவோ 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வாட்ஃபர்ட் குழுவைத் தோற்கடித்த போதிலும் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங் களில் அது தனது தற்காப்பு அரணை வலுப்படுத்த பல முயற்சி களை மேற்கொண்டதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் முதல் நிலையில் உள்ள சிட்டி குழு ஆட்டத்தின் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

அதன் பயனாக லிரோய் சானே, ரியாத் மாஹ்ரெஸ் ஆகியோர் போட்ட கோல்களால் 2=0 என்ற முன்னிலை பெற்றது. ஆனால், வாட்ஃபர்ட் குழுவின் அப்டுலாயே டுக்கோரே ஆட்டத் தின் 85வது நிமிடத்தில் வாட்ஃபர்ட் குழுவுக்காகப் போராடி ஒரு கோல் போட்ட நிலையில் சிட்டிக்கு உதறல் எடுத்தது.

இதைத் தொடர்ந்து எப்படி யாவது சமநிலையாவது காண வேண்டுமென்ற வெறியில் வாட்ஃ பர்ட் குழு ஆட்டத்தின் இறுதியில் கிடைத்த ப்ரீகிக் வாய்ப்புகளுக்கு தனது கோல் காப்பாளரான பென் ஃபோஸ்டர் என்பவரை தாக்குத லில் ஈடுபடுத்தியது. இந்த வெற்றியின் மூலம் சிட்டி குழு தரவரிசையில் தனது முதலிடத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த ஆட்டம் பற்றிக் கருத்துக் கூறிய கார்டியோலா, “இதில் எங் களது குழுவே சிறப்பாக விளை யாடியது. “2-0 என்று முன்னிலை பெற்ற போதும் காற்பந்து ஆட்டம் முடிந்து விடுவதில்லை.

“அதை வெற்றியுடன் முடித்து விட வேண்டும். ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் அவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் கிட் டின. அந்த ஐந்து நிமிடங்களில் அவர்களே சிறப்பாக ஆடினர். “பிரிமியர் லீக்கில் ஒரு குழு அசட்டையாக இருந்துவிட முடி யாது, அதனாலேயே அது அழ கான ஒன்று,” என்று கூறினார்.

நேற்றைய ஆட்டத்தில் வாட்ஃபர்ட் குழுவின் கோலை போட்ட மகிழ்ச்சியில் அப்டுலாயே டுக்கோரே (இடமிருந்து மூன்றாவது). படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்