காஷ்மீரில் பேருந்து புரண்டு விழுந்து 12 பேர் மரணம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் நகருக்கு அருகே ஒரு பேருந்து புரண்டு பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்ததாக நேற்றுத் தக வல்கள் தெரிவித்தன. காயம் அடைந்தவர்களில் பல ரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அந்தப் பேருந்து, லோரான் என்ற நகரில் இருந்து சென்று கொண்டிருந்ததாகவும் வழியில் மாண்டி பகுதியில் ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் சறுக்கிக்கொண்டு பேருந்து விழுந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மீட்புப்பணி கள் தொடர்ந்தன. விபத்தில் கொல்லப்பட்டவர் களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அதிகா ரிகள், பேருந்து ஓர் ஆற்றின் அருகே விழுந்து கிடந்ததாகவும் அதிலிருந்து பல உடல்களையும் அந்தப் பகுதி மக்கள் வெளியே மீட்டதாகவும் குறிப்பிட்டனர்.

லோரான் என்ற நகரிலிருந்து பூஞ்ச் நகருக்குச் சென்றுகொண்டிருந்த போது ஒரு பேருந்து வழியில் சறுக்கிக்கொண்டு புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அதில் மாண்டவர்களின் உடல்களை கிராமத்தினர் வெளியே மீட்டனர். படம்: இந்திய ஊடகம்