பாக். எல்லை அருகே ராணுவத் தளம் மீது தாக்குதல் 17 வீரர்கள் பலி

பாகிஸ்தானை ஒட்டிய வடக்கு காஷ்மீர் பகுதி ராணுவத் தலை மையகத்தின் மீது நேற்று தீவிர வாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாதுகாப்புப் படை யைச் சேர்ந்த 17 பேர் கொல்லப் பட்டனர். எல்லை வழியாக ஊடுருவி வந்த துப்பாக்கிக்காரர்கள் உரி என்னும் பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகம் மீது திடீர் தாக்குதல் தொடுத்ததாக இந்திய ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதே உரி ராணுவத் தளத்தை கடந்த 2014ஆம் ஆண்டும் தீவிரவாதிகள் தாக்கினர். அப் போது ஒன்பது பாதுகாப்புப் படை வீரர்கள் மாண்டனர். நேற்றைய தாக்குதல் கடந்த ஈராண்டில் பாதுகாப்புப் படை யினர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலாகக் கருதப் படுகிறது.

கையெறி குண்டுகளுடனும் துப்பாக்கிகளுடனும் ஸ்ரீநகரின் மேற்குப் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் அதிகாலையில் ஊருவிய தீவிரவாதிகள் கண் மூடித்தனமான தாக்குதலில் ஈடு பட்டனர். கையெறி குண்டுகள் வீசப் பட்டதில் தற்காலிகக் காப்பறை களும் கூடாரங்களும் தீயில் கருகி சாம்பலாயின. அவற்றுக் குள் தங்கி இருந்த பாதுகாப்புப் படையினர் கருகினர். தொடர்ந்து பல மணி நேரம் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ராணுவப் படை வீரர்கள் கூறினர். பாதுகாப்புப் படை வீரர் களுடன் தீவிரவாதிகள் துப் பாக்கியால் சுட்டு சண்டையிட் டனர். இந்தச் சண்டை கிட்டத் தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. சண்டை முடிவில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் ஒருவர் ஒளிந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவரை பாதுகாப்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்த 20 வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனை களுக்குக் கொண்டு செல்லப் பட்டனர். தகவல் அறிந்த தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் உடனடியாக காஷ்மீர் விரைந்தார். உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங்கும் தமது அமெரிக்க, ரஷ்ய பயணங்களை ரத்து செய்துவிட்டு அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

Loading...
Load next