முரசொலி - 27-1-2019 -  போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி

உலகில் எந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களைப் பார்த்தாலும், அவர்களில் கணிச மானவர்கள், உடல் நலனுக்கு, குடும்பத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு, சமூகத்துக்குப் பாதகமான மது, சிகரெட், சூது போன்ற ஏதாவது ஒரு கெட்டப் பழக்கத்துக்காவது ஆளாகி இருக்கக் கூடும். அத்தகைய வேண்டாத பழக்கங்கள் அளவு மீறிவிடும்போது பாதிப்புகள் அதிக மாகவே இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. 
ஆனால் பழக்கம் கடுகளவு என்றாலும் கேடு மலை அளவு என்று சொல்லும் அள வுக்கு மகாமோசமான, விரும்பத்தகாத ஒரு  கெட்டப்பழக்கம் எது என்றால்  அது போதைப் பொருள் புழக்கமாகத்தான் இருக்கும்.
போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத் தும்போது தனிநபர் மட்டுமின்றி, அவரின் வீடு மட்டுமின்றி, முழு நாடுமே பெரும்பாதிப் புக்குள்ளாகிவிடக்கூடிய ஆபத்து ஏற்பட்டு விடும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. 
இதை உணர்ந்துதான் மனித வளத்தை  மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள சிங்கப் பூர், சட்டவிரோத போதைப்பொருள் புழக் கத்தை அறவே சகித்துக்கொள்ளாத நாடாக அன்று முதலே இருந்து வருகிறது. 
சிங்கப்பூர், போதைப்பொருள் இல்லா சமூகமாகத் திகழ, அந்தப் பொருட்களுக்கு எதிராக அது தொடர்ந்து தொடுத்துவரும் மும்முரமான போரே மிக முக்கிய காரணம். 
அந்தப் போரில் மேலும் புதிய ஓர் உத்தியாக இந்த மாதம் 15ஆம் தேதி நாடாளுமன்றத்தில் போதைப்பொருட்களைத் தவறாகப் பயன் படுத்துவதற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்கள் நிறைவேறின.   
போதைப்பொருளை மூன்று அல்லது அதற் கும் அதிக தடவை பயன்படுத்தி பிடிபடும் திருந்தாத புழங்கிகளுக்குக் குறைந்தது ஐந்து ஆண்டு சிறை, மூன்று பிரம்படிகள் தண்டனை விதிக்க 1998ல் அறிமுகமான ஒரு சட்டம் வகைசெய்தது.
ஆனால் இத்தகைய நிலைக்கு அவர்களை உட்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை மறுவாழ்வு பயிற்சிக்கு அனுப்ப புதிய திருத்தம் வழிவிடுகிறது. இருந்தாலும் அத்தகைய போதைப் புழங்கிகள் இதர குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக் காதவர்களாக இருக்கவேண்டும். 
போதைப்பொருளுக்கு எதிராக சிங்கப் பூரின் போர் உத்தி, கடந்த 20 ஆண்டுகாலத் தில் நமக்குக் கிடைத்த அனுபவம், அறிவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இத் தகைய அணுகுமுறைக்கு மாறுகிறது என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். 
இதன்படி போதைப்பொருளைப் பயன்படுத் தும் தவறை மட்டும் செய்பவர்கள், இதர குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆகிய  இரு தரப்பினருக்கும் இடையே திட்டவட்ட மான வரையறை இருக்கும். இது சிறந்த ஓர் ஏற்பாடாகத் தெரிகிறது. 
ஏதோ ஒரு சூழலில் சிக்கி போதைப் பொருளைப் புழங்குவோர், அந்தப் பாதகச் செயலை உணர்ந்து திருந்த முன்வரும்போது அவர்களை நெடுங்காலத்துக்குச் சிறையில் போட்டு அடைத்து அவர்களின் எதிர்காலத் தையே கேள்விக்குறியாக்குவதற்குப் பதிலாக அத்தகைய நபர்கள் திருந்த வாய்ப்பு அளிப் பதே சிறந்ததாக இருக்கும். 
இத்தகைய அணுகுமுறை,  போதைப்பொருள் ஒழிப்புப் போரில் சிங்கப்பூர் மென்மையான போக்கைக் கைகொள்வதாக ஓர் எண் ணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் சிங் கப்பூர் தொடுக்கும் போர் வெற்றி இலக்கில் இருந்து விலகவில்லை என்பதே உண்மை. 
சிறார்களின் கண்களுக்கு, கைகளுக் குப் போதைப்பொருளை எட்டும்படி செய்வது, இளையர்கள் போதைப்பொருளைப் புழங்க அனுமதிப்பது எல்லாம் இனி குற்றச்செயல் களாகக் கருதப்படும். 
புதிய  திருத்தங்களில் இடம்பெறும் இவை யும் இதர அம்சங்களும் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் தன்  வேகத்தைக் குறைக்கவில்லை, கூட்டுகிறது என்பதையே பறைசாற்றுகின்றன. 
 ஒரு நாட்டில் எந்த அளவுக்குச் சட்டதிட்டங் கள் இருந்தாலும் தங்களைக் காத்துக் கொண்டு, நாட்டைவும் வீட்டையும் காக்கும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற உறுதி தனிநபர்களிடையே ஏற்பட்டாலொழிய இத்தகைய போரில் முழு வெற்றி கிடைக்காது என்பதே உண்மை நிலவரம். 
எளிதில் போதைப்பொருளுக்கு ஆளாகக் கூடிய நிலையில் இருப்போரின் குடும்பத்தினர்,  நண்பர்கள், சகாக்களுக்கும் இதில் குறிப் பிடத்தக்க முக்கிய பங்கு இருக்கிறது.