முரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்

சல்மா காலிக், மூத்த சுகாதார செய்தியாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடல்­நிலை சரி­யில்லை என்­றால் அதோடு வெளியே செல்­வது உங்­கள் நண்­பர்­க­ளுக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டும். தொற்­று­நோய் அதி­க­ரித்­தால் அதி­கம் பேர் மாண்­டு­வி­டு­வார்­கள்.

கொவிட்-19 கொள்­ளை­நோ­யாக உல­கச் சுகா­தார நிறு­வ­னத்­தால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது. 145,798க்கும் மேற்­பட்ட மக்­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை 5,531ஐக் கடந்­து­விட்­டது.

கொரோனா எல்லை கடந்து பர­வு­கிறது. சிங்­கப்­பூர் எவ்­வ­ளவு காலத்­திற்கு கொரோனா மர­ணங்­க­ளைத் தடுத்து தாக்­குப் பிடித்து நிற்­கும் என்­பது தெரி­யா­மல் சிங்­கப்­பூ­ரர்­கள் கவலை­கொண்டு இருக்­கி­றார்­கள்.

கொரோனா கிருமி சிங்­கப்­பூ­ரில் 200 பேரைத் தொற்றி இருக்­கிறது. 97 பேர் குண­ம­டைந்­து­விட்­டார்­கள் என்­றா­லும் 11 பேர் இன்­ன­மும் தீவிர கண்­கா­ணிப்­பில் இருந்து வரு­கி­றார்­கள்.

யாரும் இது­வ­ரை­யில் மர­ணம் அடை­ய­வில்லை என்­றா­லும் மர­ணம் நெருங்கி வரக்­கூ­டிய ஆபத்து இருப்­ப­தாக சுகா­தா­ரத் துறை­யி­னர் அபா­யச் சங்கு ஊதி வரு­கி­றார்­கள்.

கொரோனா சிங்­கப்­பூ­ரில் மேலும் மர­ணங்­களை ஏற்­ப­டுத்­தி­வி­டுமா என்­பது­தான் அடுத்த கேள்வி.

சிங்­கப்­பூ­ரில் கவலை தரக்­கூ­டிய நிலை­யில் இருப்­போ­ரின் எண்­ணிக்­கை­யைப் பொறுத்தே மர­ணங்­கள் இருக்­கும். அவர்­களை உயி­ரோடு மீட்­ப­தற்­குப் போதிய மருத்­துவ சாத­னங்­கள், வளங்­கள் இருப்­ப­தும் இதில் முக்­கி­யம்.

ஒவ்­வொ­ரு­வ­ரின் பழக்­க­வ­ழக்­கங்­களும் ஒட்­டு­மொத்­த­மாக நல்ல பலன்­களை ஏற்­படுத்த முடி­யும் என்­ப­தால் நாம் ஒவ்­வொருவரும் குறிப்­பி­டத்­தக்க நல்ல, விரும்­பிய பலன்­க­ளைச் சாதிக்க முடி­யும்.

தலை­சி­றந்த சிகிச்­சை­களை அளித்­தா­லும்­கூட கொரோனா கிரு­மி­கள் ஒரு­வ­ரைக் கொன்­று­வி­டும் ஆற்­றல் கொண்­டவை. இருந்­தா­லும் உல­க­ள­வில் ஏற்­பட்டு உள்ள மர­ணங்­க­ளைப் பார்க்­கை­யில், மருத்­து­வச் சாத­னங்­கள் போதிய அள­வுக்கு இல்­லா­த­தும் கொரோனா மர­ணங்­க­ளுக்கு ஒரு கார­ணம் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கடு­மை­யான நோயா­ளி­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில், இந்­தக் கிரு­மி­கள் நுரை­யீ­ர­லைத் தாக்கி சளிக்­காய்ச்­சலை ஏற்­ப­டுத்­தி­வி­டும்.

கொரோ­னா­வுக்கு இப்­போது மருந்து இல்லை. அந்­தக் கிரு­மி­யின் பிடி­யில் இருந்து உடல் மீண்டு வரும்­வரை மருத்து­வர்­கள் போராடி வரு­கி­றார்­கள்.

கடு­மை­யான சளிக்­காய்ச்­ச­லுக்கு ஆளாகி இருப்­ப­வர்­க­ளுக்­குச் செயற்கை சுவா­சம் அளிக்­கப்­ப­டு­கிறது. தீவிர கண்­கா­ணிப்­பில் உள்­ள­வர்­க­ளுக்கு பிரா­ண­வா­யு­வைக் கொடுக்க செயற்கை சுவாசச் சாதன வச­தி­யும் அவ­சி­ய­மா­கிறது.

சிங்­கப்­பூ­ரில் இப்­போது 11 பேர் தீவிர கண்­கா­ணிப்­பில் இருக்­கி­றார்­கள். இந்த எண்­ணிக்கை, ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில் அவ்­வ­ளவு அதி­கம் அல்ல. ஆனால் தொற்­று­நோய் அதி­க­ரித்­தால் கவலை அதி­க­மா­கி­வி­டும்.

மிக­வும் மோச­மான நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்கு உள்ள ஆற்­றல், அதன் வழக்­க­மான பயன்­பாட்­டைப் பொறுத்தே இருக்­கும்.

திடீ­ரென்று மிக அதி­கமானோருக்கு சிகிச்சை அளிக்க வேண்­டிய கட்டாயம் ஏற்­பட்­டால் எல்லா நோயா­ளி­க­ளுக்­குமே தேவைப்­படும் அள­விற்­குத் தேவைப்­படும் சிகிச்­சையை அளிக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டு­வி­ட­லாம்.

கொரோனா தொடங்­கிய முதல் சில வாரங்­களில் சீனா­வில் மரண விகி­தம் சுமார் 4 விழுக்­கா­டாக இருந்­தது. மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை வச­தி­கள் போதிய அள­வுக்கு இல்­லா­ததே இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம்.

இத்­தா­லி­யில் கிரு­மி தொற்­றி­யோ­ரில் சுமார் 5 விழுக்­காட்­டி­னர் மாண்­டு­விட்­ட­னர். இத்­தா­லி­யில் மாண்­ட­வர்­களில் பல­ரும் முதி­ய­வர்­கள். இதைத்­தான் லண்­டன் துப்­பு­ரவு மற்­றும் வெப்ப மண்­டல மருத்­து­வக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் டேவிட் ஹேமன், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் சுட்­டிக்­காட்­டி­னார்.

மரண விகி­தம் என்­பது ஒரு நோயாளி­யின் வயது, அவ­ருக்கு இருக்­கக்­கூ­டிய வேறு நோய்­கள், சிகிச்சை வச­தி­கள் ஆகி­ய­வற்­றைப் பொருத்­த­தாக இருக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

இப்­போ­தைய நில­வ­ரத்­தைப் பார்க்­கை­யில், கொரோனா தொற்­றியவர்­களில் சுமார் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குப் பாதிப்பு மேலோட்­ட­மா­கத்­தான் இருக்­கிறது.

இதர 20 விழுக்­காட்­டி­னரை நினைத்­தால்­தான் கவ­லை­யாக இருக்­கிறது. அவர்­கள் அனை­வ­ருக்­கும் செயற்கை சுவா­சம் தேவைப்­ப­டாது என்று நம்­பு­வோ­மாக.

சிங்­கப்­பூ­ரில் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு இருப்­போ­ரில் பாதி பேருக்­கும் மேலாக தீவிர கண்­கா­ணிப்­புத் தேவைப்­ப­டு­கிறது. அனை­வ­ருக்­கும் அல்­லது பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு ஏதோ ஒரு நேரத்­தில் செயற்கை சுவாசச் சாத­னங்­கள் தேவைப்­படும்.

கிருமி பாதித்த 10 பேரில் ஒரு­வ­ருக்கு மட்­டும் தீவிர கண்­கா­ணிப்பு தேவைப்­படும் பட்­சத்­தில்­கூட அதைச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வளங்­கள் சமா­ளித்­து­வி­டுமா என்­பது சந்­தே­கம்­தான்.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் அனு­கூ­ல­மான இரண்டு அம்­சங்­க­ளைக் குறிப்­பி­ட­லாம். ஜன­வரி மாதம் கொரோனா முதன்­மு­த­லாக தலை­காட்­டி­ய­போது அவ­ச­ர­மில்­லாத அறுவை சிகிச்­சை­களை சிங்­கப்­பூ­ரின் பொது மருத்­து­வ­ம­னை­கள் குறைத்­துக்­கொண்­டன. இத­னால் தீவிர கண்­காணிப்பு படுக்­கை­கள் காலி­யா­யின.

சென்ற ஆண்டு 330 படுக்­கை­க­ளைக் கொண்ட தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யம் திறக்­கப்­பட்­டது. அதில் தொற்று நோய்­களுக்­கா­கவே 124 தனி அறை­கள் உள்­ளன. கொரோனா கைவ­ரி­சைக் காட்­டி­ய­போது அவற்­றில் சுமார் பாதி வார்­டு­கள் மட்­டுமே பயன்­பாட்­டில் இருந்­தன.

கொவிட்-19 பாதிப்பு அதி­க­மா­னால் அதைச் சமா­ளிக்­கும் வகை­யில் தீவிர கண்­கா­ணிப்பு வார்­டு­களும் மருத்­து­வ­மனை படுக்­கை­களும் கிடைக்­கும்­படி ஏற்­பாடு செய்­யப்­படும் என்று பிர­த­மர் உறுதி கூறி இருக்­கி­றார்.

இவை எல்­லா­வற்­றை­யும் வைத்து பார்க்­கை­யில், ஒவ்­வொ­ரு­வ­ரும் சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­னது. இப்­படி நடந்­து­கொள்­ளும் போது­தான் பல உயிர்­க­ளை­யும் காக்­க­மு­டி­யும்.

தொற்­று­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் குறைந்­தால் தீவிர கண்­கா­ணிப்பு தேவைப்­படும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறை­யும்.

நோய் பர­வ­லைத் தாம­தப்­ப­டுத்­து­வது மிக முக்­கி­ய­மா­னது என்று பேரா­சி­ரி­யர் ஹேமன் குறிப்­பிட்டு இருக்­கி­றார். இதைத்­தான் சிங்­கப்­பூர் கடந்த இரண்டு மாத­மா­கச் செய்து வரு­கிறது.

இருந்­தா­லும் தனிப்­பட்­ட­வர்­கள் சிலர் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. கடந்த காலத்­தைப் போலவே நாம் இப்­போ­தும் இருந்­து­விட முடி­யாது. உங்­க­ளுக்கு கொரோனா தொற்றி இருக்­கி­றதா, இல்­லையா என்­பது பிரச்­சினை இல்லை. உடல்­நிலை சரி­யில்லை என்­றால் வெளியே சென்று பல­ரோ­டும் கலந்­து­ற­வாட வேண்­டாம்.

ஆபத்­தில் இறங்­கா­தீர்­கள். உங்­கள் மூலம் யாருக்­கா­வது கிரு­மி­கள் பர­வி­விட்­டால் அது பல­ருக்­கும் பரவி, தேவைப்­ப­டு­வோ­ருக்­குச் சிகிச்சை அளிக்க முடி­யாத சூழ்­நி­லையை ஏற்­படுத்­தி­வி­டும்.

இன்­றைய சூழ்­நி­லை­யில், யாரை­யும் கிரு­மித்­தொற்­றும் அள­வுக்கு விட்டு விடு­வது சமூக விரோ­தக் காரி­ய­மா­கவே இருக்­கும். உடல்­நிலை சரி­யில்லை என்­றால் வேலைக்­குப் போவ­தும் வில்­லன் செய்­யும் காரி­யம் போலத்­தான் இருக்­குமே தவிர கதா­நா­ய­கன் செய்­யும் வேலை­யாக இருக்­காது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!