மீண்டும் படம் இயக்கும் சவுந்தர்யா

தன் மனைவியின் தங்கையான சவுந்தர்யாவுடன் இணைந்து ஒரு கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளாராம் தனுஷ். எனினும் அந்தக் கதையில் அவர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. 'கோச்சடையான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சவுந்தர்யா. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த அப்படம் முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக அமைந்தது. இந்திய சினிமாவில் முதல் முயற்சியாக வெளிவந்த 'கோச்சடையான்' படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து படம் இயக்கும் வாய்ப்பைத் தள்ளிவைத்திருந்த சவுந்தர்யா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனு‌ஷுடன் இணைந்து காதல், நகைச்சுவையுடன் கூடிய படத்துக்கான கதையை அவர் தயார் செய்கிறாராம். இப்படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் படம் குறித்த வேறு எந்த விவரங்களும் வெளிவரவில்லை. கதை தயாரான பிறகு யார், யார் நடிப்பார்கள் என்ற விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!