அபுதாபியில் விருது பெற்ற சிவகார்த்தி, - நயன்தாரா

விருதுகளும் பட்டப் பெயர்களும் தமக்கு முக்கியமல்ல என்று சிவகார்த்திகேயன் தொடர்ந்து கூறி வருகிறார். எனினும், அவை இரண்டுமே அவரைத் தேடி வருகின்றன. அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற தென்னிந்திய அனைத் துலகத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் (சைமா) சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளார் சிவா. இந்நிகழ்வில் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு வழங்கப் பட்டது. இருவரும் தாங்கள் பெற்ற விருதுகளுடன் ‘செஃல்பி’ எடுத்துக்கொள்ளும் காட்சி ஊடகங்களில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவி வருகிறது.

அபுதாபி சுற்றுலா ஆணையத் தின் ஆதரவில் இந்த ஆண்டின் (2017) சைமா விருதுகள் வழங்கும் விழா அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 2 நாட்கள் நடைபெற் றது. இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முதல் நாளன்று தெலுங்கு, கன்னடத் திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மறுநாள் நடை பெற்ற விழாவில் தமிழ், மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டது.

சிறந்த பாடகருக்கான விருதை அனிருத் தட்டிச் சென்றார். சிறந்த பாடலாசிரியர் விருது மதன் கார்க்கிக்கு கிடைத்தது. ‘கொடி’ படம் திரிஷாவைக் கைவிடவில்லை. அதில் சிறப்பாக நடித்தமைக்காக, சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்கான விருதைத் தட்டிச் சென்றார் திரிஷா. சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகு மான், சிறந்த பாடகி சித்ரா, சிறந்த விமர்சனத்துக்குட்பட்ட நடிகர் மாதவன் என ஏகப்பட்ட விருதுகள் அளிக்கப்பட்டன. பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மலையாளத்தில் மோகன்லால், நிவின் பாலி, லட்சுமி ராம கிருஷ்ணன், ஆஷா சரத் ஆகி யோருக்குச் சிறந்த நடிகர், நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மோகன்லால், சித்ரா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வர வில்லை. அவர்களுக்கான விருது களை அவர்கள் சார்பில் வந்தவர்கள் பெற்றுக்கொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’