திருமணத்தை நிறுத்த நடந்த சதி - பாவனா

நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல் வந்த வண்ணம் உள்ளது. தற்போது நடக்கும் விசாரணை யில் அவரது திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் சிலர் சதி செய்து, அவரைக் கடத் தியது தெரியவந்துள்ளது. இத் தகவல் வெளியானது முதல் திரை யுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பாவனா கடத்தலின் பின்னணி யில் இருந்தவர்கள் யார்? அவரது திருமணத்தை தடுப்பதால் யாருக்கு என்ன லாபம் என்பதைக் கண்டறிய காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளதாம். எனினும், கடத்தலின் பின்னணி யில் இருப்பவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரளப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பாவனா விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனின் பெயர் களும் அடிபடுகின்றன. இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருமே தலை மறைவாகிவிட்டதாகக் கூறப்படுகி றது. எனினும் போலிசார் அவர் களது இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்வதில் தீவிர மாக உள்ளனராம். இதற்கிடையே தனது திருமண ஏற்பாடுகளில் கவ னம் செலுத்தி வரு கிறாராம் பாவனா. விரைவில் அவர் தரப்பிலிருந்து இது தொடர்பாக சிறிய அறிக்கை வெளிவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’