சசிகுமார்: தாய்மார்கள் தான் நிஜ நாயகர்கள்

கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­பைத் தவிர்க்க வீடு­களை விட்டு வெளி­யே­றக்­கூ­டாது என்று மத்­திய, மாநில அர­சு­கள் தொடர்ந்து அறி­வு­றுத்தி வரு­கின்­றன. மேலும், திரைக்­க­லை­ஞர்­களும் இதைத் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

பலர் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டும் காணொளி வெளி­யிட்­டும் பொது­மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்து வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் நடி­கர் சசி­கு­மார் ஒரு­படி மேலே சென்று காவல்­து­றை­யி­ன­ரு­டன் நேர­டி­யாக கள­மி­றங்கி தன் பங்­க­ளிப்­பைச் செய்­துள்­ளார்.

அண்­மை­யில் அவர் மது­ரை­யில் போலி­சா­ரு­டன் இணைந்து தன்­னார்­வ­ல­ரா­கச் செயல்­பட்­டார். போலி­சா­ரு­டன் சேர்ந்து சாலைப் போக்­கு­வ­ரத்­தைச் சரி செய்­யும் பணி­யில் ஈடு­பட்­ட­வர் பொது­மக்­க­ளுக்கு மத்­தி­யில் சில வார்த்­தை­கள் பேசி­னார்.

தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள வேளை­யில் மக்­கள் தேவை­யின்றி வெளியே வரக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­திய அவர், அத்­தி­யா­வ­சி­யத் தேவை­க­ளுக்­காக மட்­டுமே வீட்டை விட்டு வெளியே வர­வேண்­டும் என்று அரசு கூறிய பிற­கும் பலர் அத்­து­மீ­று­வது தவறு என்­றார்.

“அனை­வ­ருமே வீட்­டில் இருங்­கள். நல்­ல­துக்­குத் தான் சொல்­கி­றார்­கள். “நாம் முத­லில் தேவை­யின்றி வெளியே வரு­வதை நிறுத்த வேண்­டும். கோடை வெயி­லில் எவ்­வ­ளவு பேர் நமக்­காக உழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­பதை எண்­ணிப்­பா­ருங்­கள்.

“காவல்­து­றை­யி­னர் ரொம்­பவே கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள். கடந்த இரு தினங்­க­ளாக நான் இதை நேர­டி­யா­கப் பார்க்­கி­றேன். வெளியே கிடைப்­ப­தைச் சாப்­பிட்­டு­விட்டு, வீட்­டிற்­குப் போகா­மல் இருக்­கி­றார்­கள்,” என்று சசி­கு­மார் பேசி­யுள்­ளார்.

பெண் காவ­லர்­கள் தாங்­கள் செய்­வ­தைப் பணி­யா­க கரு­தா­மல் நாட்­டின் நன்­மைக்­கா­க­வும் மக்­க­ளின் பாது­காப்­புக்­கா­க­வும் ஆத்­மார்த்­த­மா­கச் செயல்­ப­டு­வ­தாக அவர் பாராட்­டி­னார்.

“அப்­ப­டி­யா­னால் நாம் எப்­ப­டிச் செயல்­பட வேண்­டும் என யோசித்­துப் பாருங்­கள். பெண்­கள் சிலர் கைக்­கு­ழந்­தை­க­ளுக்­குத் தாய்ப்­பால் கொடுக்­கக் கூட அஞ்­சு­கி­றார்­கள். தன்னை நோக்கி ஓடி­வ­ரும் குழந்­தை­யைத் தொட்­டால் அதற்கு ஏதே­னும் நோய்த்­தொற்று வந்­து­வி­டுமோ என்ற பயம் தாய்­மார்­க­ளுக்கு இருக்­கிறது.

“அனைத்­தை­யும் மீறி அவர்­கள் நம் வீட்­டுக் குழந்­தை­க­ளைப் பத்­தி­ர­மா­கப் பார்த்­துக் கொள்­கி­றார்­கள். எனவே நிஜ கதா­நா­ய­கர்­கள் என்­றால் அவர்­கள்­தான். ஆகை­யால் நாமும் பாது­காப்­பாக இருப்­ப­து­டன் மற்­ற­வர்­களை­யும் பாது­காப்­பாக இருக்­கச் செய்­வோம்,” என்று சசி­கு­மார் தெரி­வித்­தார்.

காவல்­து­றை­யி­னர், தூய்­மைப் பணி­யா­ள­ர்கள், மருத்து­வர்­கள், தாதி­யர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ருமே மிக­வும் சிர­மப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், போலி­சார் சொல்­வது போல் வீட்­டுக்­குள் இருப்­ப­தும் வீட்­டுக் கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தும் அவ­சி­யம் என்­றால் அதைச் செய்­து­தான் ஆக­வேண்­டும் எனத் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே தக­வல் தொழில்­நுட்­பத் துறை சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்­காக ஊர­டங்கு விதி­மு­றை­களை தளர்த்­து­வது சரி­யல்ல என்று நடி­கர் பார்த்­தி­பன் தெரி­வித்­துள்­ளார்.

ஊர­டங்கை கடு­மை­யாக கடைப்­பி­டித்­தால் அடுத்த பத்து தினங்­களில் நிலை­மையை கட்­டுக்­குள் கொண்டு வந்து விட­லாம் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

“ஊர­டங்கை தளர்த்­தி­னால் கொரோனா தொற்று மேலும் அதி­க­மாகி, விளை­வு­களை நம்­மால் சந்­திக்க முடி­யாது. பெரிய மருத்­துவ வசதி உள்ள அமெ­ரிக்கா போன்ற நாடு­களே சமா­ளிக்க முடி­ய­வில்லை. இதை மன­திற்­கொள்ள வேண்­டும்,” என்று சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் நடி­கர் பார்த்­தி­பன் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!