ரித்திகா: இது அன்பின் வெளிப்பாடு

ரசி­கர்­கள் தமக்கு வைத்­துள்ள செல்­லப் பெயர் எக்­குத்­தப்­பாக இருந்­தா­லும் அதைத் தாம் வெகு­வாக ரசிப்­ப­தா­கச் சொல்­கி­றார் நடிகை ரித்­தி­கா­சிங்.

‘இறு­திச்­சுற்று’ மூலம் தமிழ் ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­க­மான இவர் அண்­மை­யில் ‘ஓ மை கட­வுளே’ படத்­தில் நடித்­தி­ருந்­தார். இப்­ப­டத்­தில் அவரை ‘நூடுல்ஸ் மண்ட’ என சக கதா­பத்­தி­ரங்­கள் குறிப்­பி­டு­வார்­கள்.

அப்­ப­டத்­தின் வெற்­றி­யால் இளம் ரசி­கர்­கள் மத்­தி­யில் ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற பெய­ரும் பிர­ப­ல­மாகி விட்­டது. இத­னால் எங்கு சென்­றா­லும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் ரித்­தி­காவை ‘நூடுல்ஸ் மண்ட’ என்றே ரசி­கர்­கள் செல்­ல­மா­கக் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

இது­கு­றித்து சமூக வலைத்­தளத்தில் பதி­விட்­டுள்ள அவர், ரசி­கர்­க­ளின் அன்பு தம்மை நெகிழ வைத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர்­கள் இவ்­வாறு அழைப்­ப­தையே தாம் விரும்­பு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

தற்­போது அருண் விஜய்­யின் ‘பாக்­ஸர்’, அர­விந்த்­சா­மி­யின் ‘வணங்­கா­முடி’ உள்­ளிட்ட தமிழ்ப் படங்­களில் நடித்­து­வ­ரும் ரித்­திகா தெலுங்­கி­லும் ஒரு படத்­தில் ஒப்­பந்­த­மாகி இருப்­ப­தா­கத் தக­வல்.

“தமிழ் ரசிகர்கள் குறித்து நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். திறமையை எடைபோட்டு அனைத்து கலைஞர்களையும் கைதூக்கி விடுபவர்கள்.

“எனவே எனக்குள்ள செல்லப் பெயரை என் மீதான ரசிகர்களின் வெளிப்பாடு என்றுதான் கருத வேண்டும்,” என்கிறார் ரித்திகா சிங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!