உருவாகிறது ‘முந்தானை முடிச்சு’ மறுபதிப்பு

சுமார் 37 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மறு­பதிப்பாகிறது ‘முந்­தானை முடிச்சு’. இதில் சசி­கு­மார் நாய­க­னா­க­வும் ஐஸ்­வர்யா ராஜேஷ் நாய­கி­யா­க­வும் இணைந்­துள்­ள­னர். படத்தை இயக்­கு­வது யார் என்­பது இன்­னும் முடி­வா­க­வில்­லை­யாம். கடந்த 1983ஆம் ஆண்டு பாக்­ய­ராஜ் இயக்­கத்­தில் வெளி­யாகி பெரும் வர­வேற்­பைப் பெற்­றது ‘முந்­தானை முடிச்சு’.

ஏவி.எம். நிறு­வ­னம் தயா­ரித்த இப்­ப­டத்­தில் ஊர்­வசி, தீபா, பசி சத்யா உள்­ளிட்ட பலர் பாக்­ய­ரா­ஜு­டன் நடித்­தி­ருந்­த­னர். இளை­ய­ராஜா இசை­ய­மைத்த இப்­ப­டத்­தின் பாடல்­க­ளுக்­குப் பெரும் வர­வேற்பு கிடைத்­தது.

வசூல், விமர்­சன ரீதி­யில் பெரும் வெற்றி பெற்ற இப்­ப­டத்­தின் மறு­ப­திப்­பிற்­கும் கதை, திரைக்­கதை வச­னம் எழு­து­கி­றார் பாக்­ய­ராஜ். சசி­கு­மார் நாய­க­னாக நடிப்­பது முன்பே உறுதி­யா­கி­விட்ட நிலை­யில் நாய­கி­யைத் தேர்ந்­தெடுக்க நீண்ட ஆலோ­சனை நடை­பெற்­றது. அதன் முடி­வில் ஐஸ்­வர்யா ராஜேஷை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர். இதர நடி­கர்­க­ளுக்­கான தேர்வு நடை­பெற்று வரு­கிறது. 2021ஆம் ஆண்டு இறு­திக்­குள் படத்தை வெளி­யி­டத் திட்­ட­மாம்.

முன்­ன­தாக அண்­மைய பேட்டி ஒன்­றில் இப்­ப­டத்தை இயக்­கு­வ­தற்கு நல்ல இயக்­குநரைத் தேடிக்கொண்­டி­ருப்­ப­தாக சசி­கு­மார் தெரி­வித்­தி­ருந்­தார்.

“சிறு வயது முதலே நான் பாக்­ய­ரா­ஜின் படங்­க­ளைப் பார்த்து வளர்ந்­த­வன். ‘முந்­தானை முடிச்சு’ தவிர அவர் இயக்­கத்­தில் வெளி­வந்த மேலும் 2 படங்­கள் எப்­போ­துமே என் மன­தில் இடம்­பி­டித்­தி­ருக்­கும்.

“அவ­ரு­டன் ஒரு படத்­தி­லா­வது இணைந்து நடிக்­க­வேண்­டும் என விரும்­பி­னேன். அதற்­காக நான் மேற்­கொண்ட முயற்­சி­யின் பல­னாக ஏற்­கெ­னவே ஒரு படத்தை மறு­ப­திப்பு செய்ய இருந்­தோம்.

“ஆனால், அது சாத்­தி­ய­மா­க­வில்லை. நல்­ல­வே­ளை­யாக இப்­போது நானும் தயா­ரிப்­பா­ளர் சதீ­ஷும் அவரை நேரில் சந்­தித்­துப் பேசி ‘முந்­தானை முடிச்சு’ மறு பதிப்புக்கு அனு­மதி பெற்­றி­ருக்­கி­றோம்.

“எங்­கள் எண்­ணத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­துமே அவ­ரும் உற்­சா­க­மாக சம்­ம­தித்­தார். எனி­னும் அவர் படத்தை இயக்­க­வில்லை. நானும் பல படங்­களில் நடிக்க ஒப்­புக்கொண்­டி­ருப்­ப­தால் இயக்­கு­நர் பொறுப்பை ஏற்­க­முடி­ய­வில்லை,” என்­கி­றார் சசி­கு­மார்.

இன்­றைய இளம் ரசி­கர்­க­ளுக்கு ‘முந்தானை முடிச்சு’ படம் குறித்து அதி­கம் தெரிந்­தி­ருக்­காது என்று குறிப்­பி­டு­ப­வர், ஒரு­வேளை முதல் பாகத்­தைப் பார்த்­தி­ருந்­தா­லும் இப்­பொ­ழுது உரு­வாக உள்ள மறுபதிப்பும் அதே சுவா­ர­சி­யத்­து­டன் இருக்­கும் என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

“மறுபதிப்பி­லும் முருங்­கை­க்காய் சமா­சா­ரம் இருக்­கும். சுவை குறை­யா­மல் பல காட்­சி­க­ளைப் பட­மாக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளோம். கூடிய விரை­வில் படத்­தில் பணி­யாற்­றும் மற்ற தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் குறித்த அறி­விப்பு வெளி­யா­கும்,” என்­று உற்சாகத்துடன் சொல்கிறார் சசி­குமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!