மீண்டும் குடும்பத்துடன் இணைந்த விஜய்

நடி­கர் விஜய் மீண்­டும் தன் பெற்­றோ­ரு­டன் இணைந்­து­விட்­டார்.

அவ­ரது ரசி­கர்­கள் இந்த தக­வலைத்­தான் இப்­போது உற்­சா­கத்­து­டன் சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து வரு­கி­றார்­கள்.

விஜய் தன் தாயார் ஷோபா­வுடன் காணப்­படும் அண்­மைய புகைப்­படம்­தான் ரசி­கர்­களை உற்­சா­கப்­படுத்தி உள்­ளது.

சில மாதங்களுக்கு முன்பு, திடீ­ரென விஜய் பெய­ரில் ஓர் அர­சி­யல் கட்­சியைத் தொடங்­கு­வ­தாக அறி­வித்­தார் எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர். அதி­லும் விஜய் பெய­ரில் அந்­தக் கட்சி தொடங்­கப்­பட்­டது.

இது­கு­றித்து அவ­ரைக் கலந்­தா­லோ­சிக்­கா­ம­லேயே எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் அறி­விப்பை வெளி­யிட, குடும்­பத்­தில் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

தமக்­கும் அந்த அர­சி­யல் கட்சிக்­கும் எந்­த­வி­த­மான தொடர்­பும் இல்லை என அறி­வித்­தார் விஜய். அதன் பிறகு கடந்த சில மாதங்­களாக அவர் தன் தந்­தையை சந்­திப்­ப­தில்லை, அறவே பேசு­வ­தில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

"இது தந்­தைக்­கும் மக­னுக்­கு­மான சிறிய கருத்து வேறு­பாடு. விரை­வில் எல்­லாம் சரி­யா­கும்," என்­றார் எஸ்.ஏ.சி.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் தன் மகனை சந்­தித்­துப் பேசி­யுள்­ளார் விஜய்­யின் தாய் ஷோபா. அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­படம் வெளி­யாகி உள்­ளது.

இதைக்­கண்டு உற்­சா­க­ம் அடைந்த ரசி­கர்­கள், விரை­வில் தன் தந்­தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய் காட்­சி­ய­ளிக்­கும் புகைப்­ப­ட­மும் வெளி­யா­கும் என நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!