விஜய் சம்பளம் ரூ.118 கோடி

விஜய்­யின் 66ஆவது படத்தை தெலுங்கு தயா­ரிப்­பா­ளர் தில்­ராஜ் தயா­ரிக்­கி­றார் என்­ப­தும் தெலுங்கு இயக்­கு­நர் வம்சி இயக்­கு­வ­தும் உறு­தி­யா­கி­விட்­டது. இந்­தப் படத்­துக்­காக விஜய் வாங்­கப்­போ­கும் சம்­ப­ளம் ரசி­கர்­களை வாய்­பி­ளக்க வைத்­தி­ருக்­கிறது.

தயா­ரிப்­புத் தரப்பு அவ­ரி­டம் பேசி­யுள்ள தொகை ரூ.118 கோடி எனக் கூறப்­ப­டு­கிறது.

'தள­பதி - 66' என்று குறிப்­பி­டப்­படும் இந்­தப் படத்­துக்­கான பணி­கள் இன்­னும் அதி­கா­ர­பூர்­வ­மாக தொடங்­க­வில்லை. அதற்­குள் பல ஓடிடி தளங்­கள் படத்­தின் மின்­னி­லக்க விநி­யோக உரி­மை­யைப் பெறு­வ­தில் போட்­டி­போட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், முன்­னணி ஓடிடி நிறு­வ­னம் இப்­ப­டம் சார்ந்த பல்­வேறு உரி­மங்­க­ளைப் பெற பெருந்­தொகை கொடுப்­ப­தா­கக் கூறி தில்­ரா­ஜு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி மொத்­த­மாக ரூ.200 கோடியை அள்­ளிக்­கொ­டுக்­கத் தயா­ராக இருப்­ப­தாக அந்­நி­று­வ­னம் கூறி­யுள்­ள­தாம். இதைக்­கேட்ட தயா­ரிப்­புத் தரப்­புக்கே மலைப்­பா­கி­விட்­டது. இவ்­வ­ளவு பெரிய தொகையை அவர்­கள் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்­கள்.

எனி­னும் தமிழ், தெலுங்கு மொழி­களில் வெளி­யா­கும் இந்­தப் படத்தை பிற மொழி­க­ளி­லும் மொழி­மாற்­றம் செய்து ஓடிடி தளங்­களில் வெளி­யி­டும் பட்­சத்­தில் முத­லீடு செய்­ததை திரும்­பப் பெற்­று­வி­ட­லாம் என அந்­நி­று­வ­னம் கணக்­கிட்­டி­ருக்­கும் என்­கி­றார்­கள் விவ­ரம் அறிந்­த­வர்­கள்.

"இந்­தப் படத்­துக்­காக விஜய்க்­குப் பேசப்­பட்­டி­ருக்­கும் சம்­ப­ளம் ரூ.118 கோடி. மற்ற நடி­கர், நடி­கை­யர், தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள், படப்­பி­டிப்­புக்­கான செலவு என அனைத்­தை­யும் 200 கோடி ரூபா­யில் ஈடு­கட்­டி­வி­ட­லாம். அதன் பின்­னர் திரை­ய­ரங்க உரி­மம், வெளி­நாட்டு உரி­மம் என திர­ளும் பல­கோடி ரூபாய் தயா­ரிப்­புத் தரப்­புக்கு லாப­மாக அமை­யும்.

"எனி­னும் ஓடிடி நிறு­வ­னத்­து­ட­னான பேச்­சு­வார்த்தை இன்­னும் முழுமை பெற­வில்லை. அநே­க­மாக நடப்பு நிதி­யாண்டு மார்ச் மாதம் முடி­வ­டைந்த கையோடு அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கக்­கூ­டும்," என்­கி­றார் மூத்த செய்­தி­யா­ளர் ஆர்.எஸ்.அந்­த­ணன்.

மேலும், இந்­தப் படம் அண்­மைய சில ஆண்­டு­களில் வெளி­வந்த விஜய் படங்­கள் போல் அல்­லா­மல், மென்­மை­யான குடும்­பக் கதையை மைய­மா­கக் கொண்டு உரு­வாக்­கப்­படு­வ­தாக இயக்­கு­நர் வம்சி கூறி­யுள்­ளார்.

கிட்­டத்­தட்ட 'பூவே உனக்­காக', 'காத­லுக்கு மரி­யாதை' ஆகிய படங்­க­ளைப் போல் மென்­மை­யான காத­லும் இந்­தக் கதை­யில் இருக்க வேண்­டும் என விஜய் விரும்­பு­வ­தா­கத் தக­வல்.

இதை­ய­டுத்து விஜய்க்கு ஏற்ப கதையை உரு­வாக்­கி­ய­தும் அவ­ரி­டம் அதை விரி­வா­கக் கூறி­யுள்­ளார் இயக்­கு­நர் வம்சி. அதைக் கேட்ட விஜய் அசந்து போனா­ராம்.

"கடந்த இரு­பது ஆண்­டு­களில் இப்­ப­டிப்­பட்ட ஒரு கதையை நான் கேட்­ட­தில்லை.

"எந்­த­வித குறை­யும் இல்­லா­மல் மிக நேர்த்­தி­யா­க­வும் அரு­மை­யா­க­வும் இருக்­கிறது," என்று இயக்­கு­ந­ரி­டம் மட்­டு­மல்­லா­மல் தனது நட்பு வட்­டத்­தி­லும் இவ்­வாறு கூறி­யுள்­ளார் விஜய். 'தள­பதி - 66' படத்தை இந்த ஆண்டு தீபா­வ­ளிப் பண்­டி­கை­யை­யொட்டி வெளி­யிட வேண்­டும் என விரும்­பு­கி­றார் தயா­ரிப்­பா­ளர்.

ஆனால் இயக்­கு­நர் சங்­க­ரின் புதுப்­ப­ட­மும் தீபா­வ­ளி­யைக் குறி­வைத்து தயா­ராகி வரு­கிறது. ஒரு­வேளை சங்­கர் படம் வெளி­வ­ரும் என்­றால், தன் படத்தை அடுத்த ஆண்டு பொங்­கல் திரு­நாள் வெளி­யீ­டாக கள­மி­றக்­க­லாம் என்று கூறி­விட்­டா­ராம் விஜய். தயா­ரிப்­புத் தரப்­பும் இதை ஏற்­றுக்­கொண்­ட­தா­கத் தக­வல். இதற்­கி­டையே, 'தள­பதி 66' படத்­துக்கு தெலுங்­கில் முன்­னணி இசை­ய­மைப்­பா­ள­ராக உள்ள தமன் இசை­ய­மைப் ­பார் என்று கூறப்­ப­டு­கிறது. நாய­கி­யாக ராஷ்­மிகா நடிக்க வாய்ப்­புள்­ள­தாம்.

, :

  

விஜய்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!