‘குடும்பத்தோடு நடுத்தெருவில் நின்றேன்’

'மெட்டி ஒலி' தொலைக்­காட்­சித் தொட­ரில் கொடு­மைப்­ப­டுத்­தும் மாமி­யா­ராக வந்து நேயர்­க­ளின் கோபத்­துக்கு ஆளா­ன­வர் சாந்தி வில்­லி­யம்ஸ்.

அதன் பிறகு பல தொடர்­களில் பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருந்­தா­லும், இன்­னும்­கூட கொடு­மைக்­கார மாமி­யா­ரா­கவே ரசி­கர்­கள் தன்­னைப் பார்ப்­ப­தா­கச் சொல்­லிச் சிரிக்­கி­றார். தற்­போது 'பாண்­டி­யன் ஸ்டோர்ஸ்' தொலைக்­காட்­சித்தொட ­ரில் நடித்து வரும் சாந்தி வில்­லி­யம்ஸ், தன் வாழ்க்கை சோகமும் சவால்­களும் நிறைந்­தது என்கிறார்.

"இன்று ஓர­ளவு வச­தி­யாக இருக்­கி­றோம். ஆனால் சில ஆண்டு­க­ளுக்கு முன்பு வச­தி­யாக வாழ்ந்து கொண்­டி­ருந்த வீட்டை விற்று, அடுத்த வேலை சோற்­றுக்கு வழி­யில்­லா­மல் நடுத்­தெ­ரு­வில் நின்­றோம். ஆடம்­பர வாழ்க்­கைக்­குப் பிறகு சீட்­டுக்­கட்­டுப்­போல் எல்­லாம் சரிந்­து­போ­னது. குடும்­பப்பாரத்தை தனி­யா­ளாக மீட்­டெ­டுக்க பாடு­பட்­டேன்," என கடந்த காலத்தை நினை­வு­கூர்­கி­றார் சாந்தி.

இவ­ரது கண­வர் அந்­நாள்­களில் மிகப் பிர­ப­ல­மான ஒளிப்­ப­தி­வா­ளர். ரஜினி உள்­ளிட்ட பல முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­க­ளுக்கு ஒளிப்­பதிவு செய்­த­வர்.

"நான் கேர­ளா­வில் பிறந்­த­வள் என்­றா­லும் வளர்ந்து ஆளா­னது எல்­லாம் சென்­னை­யில்­தான். என் அக்­கா­வுக்கு சினிமா நடி­கை­யாக வேண்­டும் என்று ஆசை. ஆனால் எனக்­குத்­தான் சினிமா வாய்ப்பு கிடைத்­தது. 12 வய­தா­ன­போது குறும்­ப­டம் ஒன்­றில் நடித்­தேன். அதன்பிறகு எடுத்த எடுப்­பி­லேயே மலை­யாளப் படத்­தில் கதாநாயகி யாக நடிக்­கும் வாய்ப்பு தேடி வந்தது. அடுத்த சில ஆண்­டு­களில் பல படங்­களில் நாய­கி­யா­க­வும் குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடித்­தி­ருக்­கி­றேன்.

"ஒளிப்­ப­தி­வா­ளர் வில்­லி­யம்­ஸுடன் ஒரு படத்­தில் பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைத்­தது. அவ­ரது தோற்­றத்தை வைத்து சாதா­ர­ண­மாக எடை­போட்­டு­விட்­டேன். பிறகு­தான் அவர் எவ்­வ­ளவு பெரிய ஒளிப்­ப­தி­வா­ளர் என்­பது தெரி­யவந்­தது. திடீ­ரென ஒரு­நாள் என்னிடம் அவர் திரு­ம­ணம் செய்துகொள்ள விரும்­பு­வ­தா­கக் கூறி­ய­போது நான் மறுத்­து­விட்­டேன். அவர் மனை­வி­யைப் பிரிந்து வாழ்ந்து வந்த நேரம் அது. எனது பதி­லால் மன­மு­டைந்து போன­வர், உயிரை மாய்த்­துக்கொள்ள முயன்­ற தா­கக் கேள்­விப்­பட்­டேன்.

"அதன் பிறகு எப்­ப­டியோ அவர் மீது ஒரு­வித பரி­தா­பம் ஏற்­பட்­டது. அப்போது அவ­ருக்கு 46 வயது எனில் எனக்கு இரு­பது வய­து­தான் ஆகி­யி­ருந்­தது. கிட்­டத்­தட்ட என் அப்­பா­வின் வயது. எனி­னும் அவ­ரது அன்­பைப் புரிந்­து­கொண்டு திரு­ம­ணத்­துக்குச் சம்­ம­தித்­தேன்.

"என் கண­வர் நிறைய சம்­பா­தித்­தார். வித­வி­த­மான கார்­க­ளாக வாங்­கிக் குவித்­தார். காருக்கு செலவு செய்தே சொத்தை இழந்­தார் என்றுகூட சொல்­ல­லாம்.

"1992ஆம் ஆண்டு அவ­ரது உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. சென்னை­யில் இருந்த வீட்டை விற்­று­தான் அவ­ரது மருத்­து­வச் செல­வு­களைச் சமா­ளித்­தோம். வீட்டை இழந்து, சேமிப்பு கரைந்து குடும்­பத்­து­டன் நடுத்­தெ­ரு­வில் நின்­றேன். நாங்­கள் விற்ற அந்த வீட்­டின் விலை இன்று நூறு கோடி ரூபாய் இருக்­கும். வாழ்ந்து கெட்ட குடும்­பம் என்­ப­தற்கு நாங்­கள்­தான் சரி­யான உதா­ர­ணம்.

"முன்பு மோகன்­லால், மம்­மூட்டி, ரஜினி என்று பலர் வீட்­டுக்கு அடிக்­கடி வந்து போவார்­கள். ஆனால் கண­வர் நோய்­வாய்ப்­பட்ட பிறகு யாரும் வரவில்லை. கணவரின் நண்பர் என்பதால் ரஜினி மட்­டும் சில உத­வி­கள் செய்­தார்," என்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

, :

  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!