ஜூன் 21ஆம் தேதியிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்

முகக்கவசம் இல்லாத நடவடிக்கைகள்

அரசாங்கம், நாளை முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்க திட்டமிட்டுள்ளது.

இருந்தாலும் உடற்பயிற்சி மற்றும் உடலுறுதிக் கூடங்களுக்குச் செல்ல விரும்புவோர் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

கிருமிப்பரவல் தொடர்ந்து கட்டுக்குள் இருந்தால் மட்டுமே ஜூன் 21ஆம் ேததியிலிருந்து முகக்கவசத்தை அகற்றி ஈடுபட வேண்டிய உள்ளரங்கு விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அமைச்சுகள்நிலை பணிக்குழு அண்மைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. ஆனால் அத்தகைய இடங்களில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. இதனால் உடற்பயிற்சி அல்லது உடலுறுதிக் கூடங்களில் மட்டுமாவது முகக்கவசத்தை அகற்றி சுதந்திரமாக காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகக்கவசமில்லாத வாடிக்கையாளர்களால் நோய்த்தொற்று ஆபத்துள்ள ஊழியர்களுக்கு முறையான கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான செலவுகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசாங்கமே ஏற்கும். உணவு, குளிர்பானக் கடைகள், உடலுறுதிக்கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற இடங்களில் வேலை செய்யும் ஊழியர் களுக்கு முகக்கவசம் இல்லாத வாடிக்கை யாளர்களால் நோய் தொற்றும் அபாயமுள்ளது.

பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்படவிருக்கிறது. திருமணப் பதிவு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள், நேரடி மேடை நிகழ்ச்சிகள், மாநாடு, கண்காட்சி போன்றவற்றுக்கு 100 பேருக்கு ேமல் கலந்து கொள்ள முன்பரிசோதனையுடன் அனுமதிக்கப் படும். இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் உச்சவரம்பு நாளையிலிருந்து முன் பரிசோதனை யுடன் 250க்கு அதிகரிக்கப்படலாம்.

நேரடி துணைப்பாட,

செறிவூட்டல் வகுப்புகள்

18 வயது, அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கான இத்தகைய வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்படும். பாடல், காற்று இசைக் கருவிகளுக்கான வகுப்புகளும் இவற்றில் உள்ளடங்கும்.

விளையாட்டு

வகுப்புகள்

உட்புறம், வெளிப்புறம் நடத்தப்படும் விளையாட்டு வகுப்புகளில் பயிற்று விப்பாளர் உட்பட 30 பேர் வரை பங்கேற்க முடியும். ஆனால் ஒரு குழுவில் ஐவருக்கு மேல் இருக்கக் கூடாது.

பாடல், காற்று

இசைக் கருவிகள்

நேரடி நிகழ்ச்சியின்போது கலைஞர்கள் முகக்கவசத்தை அகற்றி பாடல்கள் பாடவும் காற்று இசைக் கருவிகளை இசைக்கவும் அனுமதி வழங்கப்படும்.

வழிபாட்டுச் சேவைகளுக்கும் இந்த அனுமதி பொருந்தும்.

உடலுறுதிக் கூடங்கள்,

உடற்பயிற்சி நிலையங்கள்

திருமண வரவேற்பு

நிகழ்வுகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்படும். ஆனால் அனைவருக்கும் நிகழ்வுக்கு முந்திய பரிசோதனை கட்டாயம். ஐம்பது பேருக்குக் கீழ் இருந்தால்

முன்பரிசோதனை தேவையில்லை.

திருமணக் குழுவினருக்கு நிகழ்வுக்கு முந்திய பரிசோதனை அவசியமாகும்.

இவர்கள் அதிகபட்சமாக 20 பேர் கூடலாம். இவர்களுக்கு உணவு உண்ண அனுமதியுண்டு.

உணவகத்தில் உணவு

உண்ண அனுமதி

உணவு, குளிர்பானக் கடைகளில் பாதுகாப்பு இடைவெளியுடன் உணவு உண்ண அனுமதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!