தேர்தலைப் புறக்கணிக்கும் 100 பழங்குடியின கிராமங்கள்

ஜார்க்கண்ட்: இன்று வாக்களிக்க உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பழங்குடியின கிராமங்கள் தேர் தலைப் புறக்கணித்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த 100க்கும் அதிகமான கிராமங்களின் நுழைவுப் பகுதியில் பெரிய பலகைப் பாறையிலான முத்திரைக் கல்லில் அரசியல்வாதி களாக இருந்தாலும் தற்காலிக மாகப் பார்வையிட யார் வந்தாலும் வெளியாட்கள் எவருக்கும் ஊருக் குள் அனுமதியில்லை என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

இக்கிராமங்கள் பாதல்காடி பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளாகும். அதேநேரம் இவற்றை மாவோயிஸ்ட்டுகளின் கோட்டை எனவும் கூறுகிறார்கள்.

தேர்தல் குறித்து பேசிய அத் தொகுதியைச் சேர்ந்த 42 வயதான ரட்டன் ட்யூத்தி என்பவர், "எங்கள் உரிமைகளை எல்லாம் முதல்வர் ரகுபார் தாஸ் பறித்துவிட்டார். உரிமைகளைப் பறித்துக்கொண்ட பிறகு எப்படி வாக்களிக்க முடியும். மேலும் போராடினால் மாவோ யிஸ்ட்டுகள் என்று சொல்லி எங்களைச் சுட்டுக் கொல்கிறார் கள்.

''நீங்கள் குறிப்பிடும் எந்த அடிப்படை வசதிகளும் எங்கள் கிராமத்தில் செய்யப்படவில்லை. என்னைக் கேட்டால் அரசாங்கம் எங்களுக்கு எதுவும் செய்யத் தேவையில்லை. எங்களை நிம்மதி யாக விட்டாலே போதும்," என்கி றார்.

இன்று நடைபெறவுள்ள தேர்த லில் இத்தொகுதியில் பாஜகவின் வேட்பாளரும் முன்னாள் முதல் வருமான அர்ஜூன் முண்டாவும் அவரை எதிர்த்து காங்கிரசைச் சேர்ந்த காளிச்சரண் முண்டாவும் போட்டியிடுகின்றனர்.

ஆனால், எந்த வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பதற்காக இது வரை இக்கிராமங்களுக்குள் நுழைந்ததில்லை என்கிறது பிடிஐ செய்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!