சிங்கங்களுக்கும் கொவிட்-19!

கொவிட்-19 கிருமித்தொற்று மிருகங்களையும் விட்டு வைப்பதாக இல்லை.

ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் தோட்டத்தில் 8 சிங்கங்களுக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஆர்ட்டி- பிசிஆர் (RT-PCR) சோதனை முடிவுகளில் இது உறுதிசெய்யப்பட்டது.

அவற்றில் 4 ஆண் சிங்கங்களும் 4 பெண் சிங்கங்களும் அடங்கும்.

உடனடியாக சிங்கங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும்படி விஞ்ஞானிகள் விலங்கியல் தோட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிங்கங்களின் நுரையீரலில் கிருமித்தொற்றின் தாக்கத்தை அறிய, அவை சீட்டி ஸ்கேன் (CT-scan) சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஆசியாவின் ஆகப் பெரிய விலங்கியல் தோட்டங்களில் ஒன்றான ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் தோட்டம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

இதுவரையில், அத்தோட்டத்தில் 24க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. 
 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!