தமிழகத் தேர்தல்: ரூ.570 கோடி பிடிபட்டது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறுவதைத் தடுக் கும் பணியில் பறக்கும் படையின ரும் கண்காணிப்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, முறையான ஆவ ணங்கள் இல்லாமல் வைத்திருந்த தாக ரூ.100 கோடிக்கும் அதிக மான பணம் கைப்பற்றப்பட்டுள்ள தாகத் தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு திருப்பூர் அருகே கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளைப் பறக்கும் படை யினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தபோது அவற்றில் ரூ.570 கோடி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதிகாரிகள் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சொகுசு கார், மூன்று கன்டெய்னர் லாரிகள், அதற்குப் பின்னால் இரு சொகுசு கார்கள் அணிவகுத்து வந்ததால் சந்தேகமடைந்து அதி காரிகள் அவற்றை நிறுத்த முயன் றனர். ஆனால் அந்த வாகனங்கள் நிற்காமல் சென்றன.

இதையடுத்து, உயர் அதிகாரி களுக்குத் தகவல் தந்துவிட்டு, மூன்று கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று அதிகாரிகள் அந்த வாகனங்களை மடக்கிப் பிடித்தனர். லாரிகளில், கார்களில் இருந்த வர்களிடம் அதிகாரிகள் விசாரித்த போது கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசா கப்பட்டினத்திற்குப் பணம் எடுத் துச் செல்வதாகவும் அந்தப் பணம் முழுவதும் இந்திய ரிசர்வ் வங் கிக்குச் சொந்தமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர், வருவாய் அதி காரி உள்ளிட்ட உயரதிகாரிகள் அங்கு வந்து சேர்ந்தனர். பின்பு அந்த கன்டெய்னர்களை அவர்கள் திறந்து பார்த்தபோது அவற்றுள் ரூ.570 கோடி இருப் பது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்திற்கான முறை யான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்று கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!