அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களின் பேரில் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட் டுள்ள நிலையில், 19ஆம் தேதிக் குள் அவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பண விநி யோகம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் தெரிவித்த புகார்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள் ளவே இல்லை என அதிருப்தி வெளியிட்டார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் 25ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நேற்று முன்தினம் 232 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, பதிவான மொத்த வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் புது கோரிக்கையை முன்வைத்துள்ளார் விஜயகாந்த். சட்டப்பேரவைத் தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் ஜன நாயக முறையில் நடத்தவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். குறிப் பிட்ட இரு தொகுதிகளுக்கான தேர்தலை 19ஆம் தேதிக்கு முன் நடத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத் துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next