விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திடீர் முடிவு

சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலக உள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவின் செயல்பாடுகளே தோல்விக்கு முதல் காரணம் என்றும் முதல்வர் வேட்பாளர் விஜய காந்தின் பேச்சு மக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி ஒருவர் கூறியதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “இனி இக்கூட்டணியுடன் சேர்ந்து எந்தத் தேர்தலையும் சந்திக்கப் போவது இல்லை என்ற முடிவுக்கு திருமாவள வன் வந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட் டணி இல்லை. நாடாளுமன்றத் தேர்தல்தான் இலக்கு,” என்று அந்நிர்வாகி கூறியுள்ளார்.