சிலைகள் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் சுபாஷ் முன்னிலை

கும்பகோணம்: அரியலூர் மாவட் டம் உடையார்பாளையம் தாலுகா சித்தமல்லி வரதராஜபெருமாள் கோயிலிலும் விக்கரமங்கலத்தில் உள்ள கோயிலிலும் 2008ஆம் ஆண்டில் விலை மதிப்பிட முடி யாத பல ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டுப்போனது. இதுகுறித்து உடையார்பாளை யம், விக்கிரமங்கலம் காவல்துறை நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக மேல் விசாரணையைச் சிலைத் திருட்டுத் தடுப்பு பிரிவு காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், துணை சூப் பிரிண்டென்ட் அசோக்குமார், ஆய் வாளர் நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், மாரிச்சாமி, பாக்கியகுமார், ஸ்ரீராம்(எ)சுனுகு, பார்த்திபன், பிச்சைமணி ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பிச்சைமணி காவல்துறை தரப்பு சாட்சியாளராக மாறினார்.

இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த போது திருச்சி மத்திய சிறையி லிருந்து சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கும்பகோணம் கூடுதல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!