சிறார் காப்பகத்தில் இருந்து தப்பிய 32 பேர்: சிக்கிய 14 பேர்

சென்னை: சிறார் காப்பகத்தில் இருந்து 32 பேர் தப்பிச் சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தப்பியோடியவர்களில் 14 பேர் பிடிபட்டதும் அவர்களில் நால்வர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததும் பரபரப்பை அதிகப்படுத்தியது. கெல்லீஸ் நகரில் உள்ள கூர் நோக்கு காப்பகத்தில் பல சிறார் கள் தங்கியுள்ளனர். நேற்று காலை சிறுவர்களுக்கு இடையே திடீர் மோதல் வெடித்தது.

இதனால் குழப்பமான சூழ் நிலை நிலவியதைப் பயன்படுத்தி 32 சிறுவர்கள் அங்கிருந்து தப்பி னர். கூர்நோக்கு காப்பகத்தின் சுவரை எகிறிக் குதித்து தப்பிச் சென்ற தகவல் கிடைத்ததும், அனைவரையும் வளைத்துப் பிடிக்க போலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் பலனாக தப்பிச் சென்ற வர்களில் 14 பேர் நேற்று மதியமே சிக்கினர். எனினும் அவர்களில் 4 பேர், போலிசாரைக் கண்டதும் தங்களிடம் இருந்த டியூப் லைட்டை உடைத்து கழுத்தையும் கைகளை யும் அறுத்துள்ளனர். இருப்பினும் மூவரது உயிருக்கும் ஆபத்தில்லை என போலிசார் தெரிவித்தனர்.

கெல்லீஸ் கூர்நோக்கு காப் பகத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 53 சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். தப்பியோ டியவர்களில் 14 பேர் பிடிபட்ட நிலையில் மற்றவர்களையும் பிடிக்க போலிசார் வலைவீசி யுள்ளனர். இதற்கிடையே, எழும்பூர் நீதிபதி லட்சுமி நேற்று கூர்நோக்கு காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!