பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்: ரகசிய இடத்தில் விஜயகாந்த்

சென்னை: அவதூறு வழக்கில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித் ததையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமறைவாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக விஜய காந்த், அவரது மனைவி பிரேம லதா மீது சில வழக்குகள் தாக் கல் செய்யப்பட்டுள்ளன. இத்த கைய ஒரு வழக்கு திருப்பூர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணையின்போது விஜய காந்த், பிரேமலதா இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து திருப்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனால் தேமுதிக வினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து விஜயகாந்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அவர், மாநில நிர்வாகிகளுடன் உள் ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திக்கொண்டி ருந்தார். ருந்தார். நீதிமன்ற உத்தரவு குறித்து அறிந்ததும் அவசர அவசரமாக, காரில் வீட்டிற்குப் புறப்பட்டுச்சென்ற அவர், சிறிது நேரத்திலேயே வீட்டில் இருந்து மற்றொரு காரில் ஏறி வெளியே சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிடியாணையைப் பயன்படுத்தி காவல்துறை தன்னைத் தேடி வரக்கூடும் என்பதாலேயே அவர் ரகசிய இடத்திற்குச் சென்றிருப்ப தாகவும் பிடியாணை உத்தரவுக்கு நீதிமன்றத்தில் தடை பெற்ற பிறகே அவர் வெளியே வருவார் என்றும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!