வங்கியில் ரூ.250,000க்கு மேல் செலுத்தினால் வரி, 200% அபராதம்

புதுடெல்லி: தங்களின் வருமான அளவை மீறி ரூ.2.5 லட்சம் பணத் துக்கும் மேல் வங்கிகளில் போடுபவர்கள் இனிமேல் வரி செலுத்தவேண்டும். வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்குச் சரியான கணக்குக் காட்டாவிடில் வருமான வரியுடன் 200 விழுக் காடு அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

லஞ்சம், ஊழல், கறுப்புப் பணத் தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது எனத் திடீரென்று அறிவித் தார். அதேநேரத்தில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். இருப்பில் இருக்கும் பழைய பணத்தை வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் கொடுத்து புதிய பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு