இலங்கை அரசு தண்டிக்கப்பட இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஈழத்தமிழர்களின் மீதான இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை குறித்த விசாரணைக்கு மேலும் கால அவ காசம் அளிக்கக்கூடாது என்பதில் இந்திய அரசு மிகவும் உறுதியாக இருக்கவேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விசாரணைக்கு கால அவகாசம் கோரப்படும் பட்சத்தில், அதை மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக எதிர்க்கவேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி உள்ளார். "ஐநா மன்றத்தின் உத்தரவுக்கு இலங்கை அரசு கட்டுப்பட மறுப்ப தும் அதற்கு அமெரிக்கா, இங்கி லாந்து போன்ற நாடுகள் கை கொடுப்பதும் அகில உலக மனித உரிமைகள் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்தியாயமாக ஆகிவிடும். "எனவே, போர்க்குற்ற விசார ணையை மேலும் இரு ஆண்டு களுக்கு நீட்டிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆணித்தரமாக எதிர்த்து, மனித உரிமைகளின் பக்கம் நின்று வாதிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்," என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!