குடிபோதையில் தள்ளாடிய மணமகனை நிராகரித்த ராஜகுமாரி

பாட்னா: முழு மதுவிலக்கு உள்ள பீகார் மாநிலத்தின் பக்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிட்டு பாண்டே என்ற ஆடவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணச் சடங்குகள் நடைபெற்ற சமயத்தில் மணமகன் பிட்டு பாண்டே குடித்துவிட்டு முழு போதையில் தள்ளாடியபடி வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் ராஜகுமாரி, பாண்டேயை மணம் புரிந்து கொள்ளமுடியாது என அதிரடியாக சபையினர் முன்னிலையில் அறிவித்தார். ராஜகுமாரியை மணமகன் வீட்டார் எவ்வளவோ சமாதானப்- படுத்தியும் அவர் கேட்கவில்லை. மதுவை மணம் முடித்- துள்ள பாண்டேயை நான் திருமணம் செய்துகொள்ள மாட் டேன் எனக் கூறி ராஜகுமாரி அங்கிருந்து வெளியேறினார். பீகாரில் குடிகார மணமகன் களை ஒதுக்கித் தள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.