நடிகர் சங்கம் கட்டடம் கட்ட இடைக்காலத் தடை

சென்னை: நடிகர் சங்கத்தின் கட்டட கட்டுமானப் பணி களுக்கு நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சென்னை திநகரில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை திநகரில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி பொது சாலைப் பகுதியை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் சார்பில் திருவரங்கன் என்ற வழக்கறிஞர் ஏற்கெனவே சென்னை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு காவல்துறையில் மனு கொடுத்திருந்தார். மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் திருவரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கட்டுமான இடத்தை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டதோடு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவும் இடைக்காலத் தடை விதித்தார்.