காஷ்மீர் சண்டையில் அதிரடி படை வீரர்கள் இருவர் மரணம்

ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் விமானப் படையைச் சேர்ந்த இரண்டு அதிரடி படை வீரர்கள் மரண மடைந்தனர். இதே மோதலில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சின் பொதுத் தொடர்பு அதிகாரி கர்னல் ராஜேஷ் கலியா, “விமானப் படையின் முக்கியப் பிரிவான ‘கருட் கமாண்டோ’ பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிரடி வீரர்கள் இந்தத் தாக்குதலில் இறந்தனர்,” என்றார். நேற்று அதிகாலை பந்திபோரா மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் அவர் சொன் னார். “ஹஜின் வட்டாரத்தில் தீவிர வாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. “இதையடுத்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. “இதனால் அதிரடி படை வீரர் களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.