தந்தையின் தொகுதியில் மகன் அகிலேஷ் போட்டி

லக்னோ: நாடெங்கிலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் தனது தந்தையின் தொகுதியில் போட்டியிட உள்ள தாக அறிவித்துள்ளார். 
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடுகிறது.
இக்கட்சி நேற்று தனது வேட் பாளர் பட்டியலை வெளியிட்டது. 
நாடாளுமன்றத் தேர்தல் நடத் தப்படும் தொகுதிகளுள் முக்கிய ஒரு தொகுதியாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆசம்கர் தொகுதி விளங்குகிறது. 
இத்தொகுதியில் போட்டியிட் டால் வெற்றி உறுதி என்பதால் தான் அத்தொகுதியை அகிலேஷ் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. 
இந்த ஆசம்கர் தொகுதி அகி லே‌ஷின் தந்தை முலாயம் சிங் யாதவின் நாடாளுமன்றத் தொகு தியாகும். கடந்த 2014 தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட முலாயம் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 
இங்கு முஸ்லிம், யாதவ சமூ கத்தினர் அதிகமானோர் வசிக் கின்றனர். இந்த இரு சமூகமும் சமாஜ்வாடி கட்சியின் வாக்கு வங்கிகளாகக் கருதப்படுகின்றன.
நடக்கவுள்ள தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட் டணி, காங்கிரஸ் இடையே மும் முனைப் போட்டி நிலவுகிறது.